பெளத்தம், சிங்கள மொழி, இலக்கியம் உட்பட 9 ‘ A’ சித்தி பெற்ற ஆயிஷா அமீனா

0 418

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கல்­விப்­பொ­துத்­த­ரா­தர (சா/த) பரீட்­சையில் பெளத்த சம­ய­பாடம், சிங்­கள மொழி உள்­ள­டங்­க­லாக 9 பாடங்­க­ளிலும் A சித்­தி­களைப் பெற்­றுள்ளார் மாணவி முஹம்­மது பாரிஸ் ஆயிஷா அமீனா.

வெல்­ல­வாய, மல்­வத்­தா­வல சிங்­கள தேசிய பாட­சா­லையில் இவர் கல்வி பயின்று வரு­கிறார். இவ­ரது தந்தை வெல்­ல­வாய நகரில் சைக்கிள் திருத்தும் நிலை­ய­மொன்­றினை நடாத்­தி­வ­ரு­கிறார்.

குடும்­பத்தில் இரண்­டா­வது பிள்­ளை­யான ஆயிஷா அமீனா தனது சாதனை குறித்து தெரி­விக்­கையில் “பரீட்­சைக்கு முன்­பி­ருந்தே என்­னிடம் இலக்கு ஒன்­றி­ருந்­தது. அந்த இலக்கை அடையும் நோக்­கிலே நான் செயற்­பட்டேன். அதி­க­மாக பரீட்சை வினாத்­தாள்­களில் கவனம் செலுத்­தினேன்.

எனக்கு பெளத்த சமயப் பாடம் போதித்த ஜின­ர­தன தேரர்,இந்­துநில், நுவன், சுபுன், நளின், லாலக மற்றும் எனது வகுப்­புக்குப் பொறுப்­பான ஆசி­ரியர் சுபுன், பிரி­வுக்குப் பொறுப்­பான மஞ்­சுள ஆகிய ஆசி­ரி­யர்கள் எனது இந்த வெற்­றியின் பின்னால் இருந்­த­வர்கள். இவர்கள் நண்­பர்கள் போன்று எனக்கு உத­விகள் செய்­தார்கள். நான் சுதந்­தி­ர­மாக எனது கல்வி நட­வ­டிக்­கை­களைத் தொடர்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய பெற்­றோ­ருக்கு நன்­றி­களைத் தெரி­விக்­கிறேன். வினாத்­தாள்­களை அதி­க­மாக செய்து பயிற்சி பெறுங்கள். ஆசி­ரி­யர்­க­ளுக்கு கீழ்­ப­டிந்து கல்­வியைத் தொட­ருங்கள் என நான் அனைத்து மாண­வர்­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுக்­கிறேன்.

நான் ஒரு பொறி­யி­ய­லா­ள­ராக வேண்­டு­மென்­பதே எனது எதிர்­பார்ப்­பாகும். அந்த இலக்­கினை எய்­து­வ­தற்­காக க.பொ.த (உ/த) பரீட்­சையில் கணி­த­பா­டத்தை நான்­ கற்கவுள்ளேன்.

பெரும்­பான்மை இன ஆசி­ரி­யர்கள் எவ்­வித பார­பட்­ச­மு­மின்றி பாடங்­களை எனக்கு கற்­பித்­த­தாலே என்னால் ஏனைய மாண­வர்­களை விட சிறப்­பாக சித்தியடைய முடிந்தது என்றும் அவர் கூறினார்.

இவர் சிங்கள மொழி, சிங்கள இலக்கியம் ஆகிய பாடங்களிலும் ‘A’ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.