ஆப்கானிலிருந்து வெளியேற முயற்சிக்கும் இலங்கையர்கள்

0 409

தொகுப்பு : ஏ.ஆர்.ஏ.பரீல்

ஆப்­கா­னிஸ்­தானில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்கள் எவ்­வித இடை­யூ­று­க­ளு­மின்றி தங்­க­ளது நாடு­க­ளுக்குத் திரும்­பு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­படும் என தலிபான் அமைப்பு தெரி­விக்­கி­றது.

ஆப்­கா­னிஸ்­தானில் நிலை­கொண்­டி­ருந்த அமெ­ரிக்கப் படை­யினர் கடந்த சில மாதங்­க­ளாக கட்டம் கட்­ட­மாக அங்­கி­ருந்து வெளி­யேறிக் கொண்­டி­ருந்த நிலையில் 20 வரு­ட­கா­ல­மாக தலிபான் போரா­ளிகள் மேற்­கொண்­டி­ருந்த போராட்­டத்தில் வெற்றி கொண்­டுள்­ளார்கள். கடந்த மாதம் 15ஆம் திகதி அவர்கள் ஆப்­கா­னிஸ்­தானின் தலை­நகர் காபூ­லையும் தங்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்து விட்­டார்கள். தலி­பான்­களின் இந்த வெற்­றியை அறிந்­ததும் முழு உல­கமும் அதிர்ச்­சிக்­குள்­ளா­னது.

தலி­பான்கள் ஆப்­கா­னிஸ்­தானை தங்­க­ளது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்த பின்பு அங்கு பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் தொடர்பில் கூடிய அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. தற்­போது ஆப்­கா­னிஸ்­தானில் சுமு­க­நிலை திரும்­ப­வில்லை. 2003இல் அமெ­ரிக்கா ஆப்­கா­னிஸ்­தானை ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளாக்­கிய போது நில­விய கல­வ­ரங்­களைப் போன்று தலி­பான்­களின் தற்­போ­தைய நட­வ­டிக்­கைகள் மோச­மா­ன­தல்ல.

காபுல் நகரில் தற்­போது இலங்­கையைச் சேர்ந்த 43 பணி­யா­ளர்கள் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். காபுல் தலை­ந­கரில் தங்­கி­யி­ருக்கும் இலங்­கை­யர்­களை இந்­நாட்­டுக்கு அழைத்து வரு­வ­தற்கு விஷேட வேலைத்­திட்­ட­மொன்று ஆரம்­பிக்­கப்­படும் என வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னுக்­கான இலங்கைத் தூது­வர்
­அட்­மிரல் பியல் டி சில்வா
இலங்­கைக்கும் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கும் இடையில் நீண்­ட­கால நல்­லு­றவு உள்­ளது. பிரித்­தா­னி­யரின் ஆட்சிக் காலத்தில் குதி­ரை­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கும் புகை­யி­ரத பாதை நிர்­மாணப் பணி­க­ளுக்­கா­கவும் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து தொழி­லா­ளர்கள் இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

2013இல் கொழும்பில் ஆப்­கா­னிஸ்தான் தூத­ரகம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அத்­தோடு இலங்கை அர­சாங்­கமும் 2014இல் ஆப்­கா­னிஸ்தான் காபுல் நகரில் இலங்கை தூத­ர­கத்தை திறந்து வைத்­தது.

அன்­றி­லி­ருந்து நான் உட்­பட நால்வர் ஆப்­கா­னிஸ்­தானின் இலங்­கைத்­தூ­து­வர்­க­ளாக கட­மை­யாற்­றி­யுள்ளோம். நான் இலங்­கையின் தூது­வ­ராக 9 மாத­காலம் தொட­ராக கட­மை­யாற்­றிய பின் வெளி­வி­வ­கார அமைச்சின் அனு­ம­தி­யுடன் விடு­மு­றையில் இலங்­கைக்கு வந்­துள்ள நிலை­யிலே இந்த எதிர்­பா­ராத மாற்றம் ஆப்­கா­னிஸ்­தானில் ஏற்­பட்­டுள்­ளது என ஆப்­கா­னிஸ்­தா­னுக்­கான இலங்கைத் தூதுவர் அட்­மிரல் பியல் டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், பூகோள ரீதியில் 6 நாடு­களின் நில எல்­லை­க­ளினால் சூழப்­பட்­டுள்ள ஆப்­கா­னிஸ்­தா­னுக்குள் பிர­வே­சிக்கும் மற்­றும் வெளி­யேறும் எல்­லை­களில் தலி­பான்கள் தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள். கடந்த 15ஆம் திகதி காபுல் தலை­நகர் உட்­பட ஆப்­கா­னிஸ்­தானின் அதி­கா­ரத்தை தலிபான் அமைப்­பினர் கைப்­பற்றிக் கொண்­டனர். விரைவில் அர­சாங்­க­மொன்­றினை அமைக்­க­வுள்­ள­தாக தலி­பான்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளனர்.

ஆப்­கா­னிஸ்­தா­னி­லுள்ள இராஜ தந்­தி­ரிகள் மற்றும் வெளி­நாட்­ட­வர்கள் அங்­கி­ருந்தும் வெளி­யே­று­வ­தற்கு முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதனால் காபுல் தலை­ந­க­ரி­லுள்ள விமான நிலை­யத்தில் பெரும் நெருக்­க­டி­யான நிலை உரு­வா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வெளி­வரும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. வெளி­நாட்­ட­வர்­களை எவ்­வித இடை­யூ­று­க­ளு­மின்றி அவர்­க­ளது நாட்­டுக்கு திரும்­பு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­படும் என தலிபான் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

நான் விடு­மு­றையில் இலங்­கையில் இருந்­தாலும் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருக்கும் இலங்­கை­யர்­க­ளுக்­கான சேவை­களை வழங்­கு­வதில் முழு மூச்­சாக ஈடு­பட்­டுள்ளேன்’ என்றார்.
வெளி­வி­வ­கார அமைச்சின் வெளி­வி­வ­கார செய­லாளர் பேரா­சி­ரியர் ஜயனாத் கொலம்­ப­கேயின் ஆலோ­ச­னையின் பேரில் இலங்­கை­யர்­களை நாட்­டுக்கு அழைத்து வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

43 இலங்­கை­யர்கள் அந்­நாட்டில் இருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய நாடு­கள் அமைப்பின் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும் வர்த்­தக நிறு­வ­னங்­களில் இவர்கள் பணி­பு­ரி­வ­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.

ஆரம்­பத்தில் சுமார் 300 இலங்­கை­யர்கள் ஆப்­கா­னிஸ்­தானில் இருந்­துள்­ளார்கள். 2020 டிசம்­பரில் இவ்­வெண்­ணிக்கை 250 ஆக குறை­வ­டைந்­த­தாக தக­வல்கள் கிடைத்­தன. பின்பு அமெ­ரிக்க இரா­ணுவ முகாம்கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட பின்பு அவ்­வி­டங்­க­ளுக்கு அண்­மையில் பணி­பு­ரிந்த இலங்­கை­யர்கள் அதி­க­மானோர் இலங்­கைக்கு திரும்­பி­யுள்­ளனர்.

ஆப்­கா­னிஸ்தான் தூது­வ­ரா­ல­யத்தில் பதிவு செய்து கொண்­டி­ருந்த 43 இலங்­கை­யர்­களில் கடந்த 16ஆம் திகதி 8 பேரை அங்­கி­ருந்தும் வெளி­யேற்ற முடிந்­துள்­ளது. என்­றாலும் கடந்த19ஆம் திக­தி­யாகும் போது 93 இலங்­கை­யர்கள் தூது­வ­ரா­ல­யத்தில் தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்­ளனர். இவர்­களில் அநேகர் அவர்கள் பணி­பு­ரியும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் நிறு­வ­னங்கள் ஊடாக வேறு நாடு­க­ளுக்குச் சென்று அங்­கி­ருந்து இலங்கை திரும்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்கள் சுமார் 35 பேர்­க­ளாவர். மேலும் 25 இலங்­கை­யர்கள் ஐக்­கிய நாடுகள் அமைப்­புடன் தொடர்­பு­பட்ட நிறு­வ­னங்­களில் தொடர்ந்தும் அங்­கேயே தங்கி பணி­யாற்­று­வ­தற்கு விரும்­பு­வ­தாக அறி­வித்­துள்­ளனர்.
இராஜ தந்­தி­ரி­களை தொடர்ந்தும் அந்­நாட்டில் சேவை­யாற்­று­மாறு தலி­பான்கள் அறி­வித்­தி­ருக்­கி­றார்கள். இது தொடர்பில் நாம் தொடர்ந்தும் அவ­தானம் செலுத்தி வரு­கிறோம் என்றும் அவர் கூறினார்.

ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருக்கும் கண்டி குண்­ட­சா­லையைச்
சேர்ந்த
ரோஹித வெலி­ஹி­தகே
ஆப்­கா­னிஸ்­தானில் இருக்கும் கண்டி குண்­ட­சா­லையைச் சேர்ந்த ரோஹித வெலி­ஹி­தகே தெரி­விக்­கையில், ‘நான் கடந்த 4 வரு­டங்­க­ளாக காபுல் நகரின் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னத்தில் சேவை­யாற்­று­கிறேன். காபுல் நகரின் எதிர்­காலம் குறித்து என்னால் எதுவும் கூற முடி­யாது. எனது வீட்டார் அச்சம் கொண்­டுள்­ளதால் நான் இலங்கை திரும்­பு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளேன். காபுல் சர்­வ­தேச விமான நிலை­யத்தை அடை­வ­தற்கு 20 நிமிடம் எடுக்கும் தூரத்­திலே நான் தற்­போது தங்­கி­யி­ருக்­கிறேன். நான் பணி­பு­ரியும் நிறு­வனம் எனக்கு அனைத்து வச­தி­க­ளையும் செய்து தந்­துள்­ளது. நான் கடந்த 19ஆம் திகதி மேலும் ஒரு இலங்­கை­ய­ருடன் கச­கஸ்­தா­னுக்கு செல்­வ­தற்கு தயா­ராக இருந்­தாலும் விமான நிலைய நுழை­வா­யிலில் இலட்­சத்­துக்கும் அதி­க­மான ஆப்­கா­னிஸ்­தா­னி­யர்கள் இருந்ததால் விமான நிலை­யத்தை அடைய முடி­யவில்லை. இதனால் 20 நிமி­டத்தில் விமான நிலை­யத்தை அடைய முடி­யா­துள்­ளது. இதற்கு 2 ½ மணித்­தி­யாலம் வரையில் செல்­லலாம்.

இலங்­கை­யர்கள் அநேகர் இலங்கை தூத­ர­கத்தில் பதிவு செய்து கொண்­டில்லை. தூது­வ­ரா­ல­யத்தில் பணி­பு­ரிந்த வெளிநாட்டு சேவை அதி­காரி கடந்த ஜூன் மாதம் கொரோ­னா­வுக்குப் பலி­யா­கி­விட்டார்’ என்றார்.

‘சிலோன் பிரைட் சிக்கன்’ உணவுச் சாலை
வலையமைப்பின் உரிமையாளர்
ஆப்­கா­னிஸ்­தானில் சாருனவ் எனு­மி­டத்தில் இயங்­கி­வரும் ‘சிலோன் பிரைட் சிக்கன்’ உணவுச் சாலையின் உரி­மை­யா­ள­ரான இலங்­கையில் ஹங்­வெல்­லயைச் சேர்ந்த அனு­ராத சப்­பு­தன்­திரி தெரி­விக்­கையில், ‘நான் 9 வரு­டங்­க­ளாக ஆப்­கா­னிஸ்­தானில் தங்­கி­யி­ருந்து இந்த வர்த்­த­கத்தை ஆரம்­பித்­துள்ளேன். எனது இந்த உணவுச் சாலையில் மூன்று இலங்­கை­யர்­களும் ஆப்கான் நாட்­டவர் ஒரு­வரும் வேலை செய்­கி­றார்கள். இறு­தியில் இந்த அசா­தா­ரண நிலைமை கார­ண­மாக அவர்கள் வெளி­யே­றி­விட்­டார்கள்.
நாங்கள் முடி­யு­மான வரையில் இந்­நாட்டை விட்டு வெளி­யேற வேண்டும். இங்­குள்ள நிலைமை குறித்து நான் இலங்­கை­யி­லி­ருக்கும் வீட்­டா­ருக்குத் தெரி­விக்­க­வில்லை. என்­றாலும் சமூக ஊட­கங்கள் மூலம் அவர்கள் அனைத்தையும் அறிந்து கொண்டுள்ளார்கள்’ என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.