உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உண்மைகள் வெளிவரும் வரை காத்திருக்கும் கர்தினாலும் முஸ்லிம்களும்

0 393

ஆங்கிலத்தில்: ஜாவிட் யூசுப்
தமிழில்: எம்.ஏ.எம்.அஹ்ஸன்

உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்று இரண்­டரை ஆண்­டுகள் கடந்த பிறகும் நடந்த விட­யங்­களின் உண்மைத் தன்­மை­யினை இந்த நாடு வெளி­யி­ட­வில்லை. இது ஒரு பாது­காப்பு தோல்­வியே தவிர உள­வுத்­துறை தோல்வி கிடை­யாது. பல்­வேறு தேவா­ல­யங்கள் மற்றும் விடு­தி­களில் அப்­பாவி பொது­மக்கள் உயி­ரி­ழக்­கவும் காய­ம­டை­யவும் கார­ண­மான இந்த திட்­ட­மிட்ட தாக்­கு­தல்­களைத் தடுக்க முடி­ய­வில்லை என்­ற­போ­திலும் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் தரப்­புகள் தாக்­கு­த­லுக்குப் பிறகு விரை­வாக நட­வ­டிக்கை எடுத்து இரண்டு வாரங்­க­ளுக்குள் பயங்­க­ர­வாத வலை­ய­மைப்பை செய­லி­ழக்கச் செய்­தன.

சில கைதுகள் இடம்­பெற்­றுள்ள நிலையில் விசா­ர­ணைகள் அனைத்தும் நத்தை வேகத்தில் நகர்­வ­தா­கவே தெரி­கின்­றது. அவ்­வப்­போது தாக்­கு­தல்­களில் தொடர்­பு­டைய ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வரு­கின்­றன. இருப்­பினும் கடந்த காலங்­களில் தாக்­கு­தல்­களைத் திட்­ட­மி­டு­வதில் அல்­லது நடத்­து­வதில் செல்­வாக்குச் செலுத்­திய குறிப்­பி­டத்­தக்க எந்­த­வொரு தனி நபரும் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை.

விசா­ர­ணை­களில் பல இடை­வெ­ளிகள் உள்­ளன. அவை பதில்­களை விட அதி­க­மாக கேள்­வி­க­ளையே எழுப்­பு­கின்­றன. சாரா அல்­லது புலஸ்­தினி (தற்­கொ­லை­தாரி ஒரு­வரின் மனைவி) என்­பவர் இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்­ற­தாக கூறப்­ப­டு­கின்ற நிலையில் அவர் தப்பிச் செல்­வதை தடுக்­கவோ அல்­லது நாட்­டுக்கு அழைத்து வரவோ எந்த முயற்­சியும் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஸஹ்­ரானின் மனை­வியின் தோழி­யாக சாரா இருந்­துள்­ளதால் அவ­ரது சாட்­சியம் இந்த வழக்கில் மிகவும் முக்­கி­ய­மா­னது என்­ப­துடன் விசா­ர­ணை­க­ளுக்கும் அது விலை­ம­திப்­பற்­ற­தாகும். மேலும் அவ­ரிடம் இது­வரை இனங்­கா­ணப்­ப­டாத அந்­த­ரங்­க­மான பல தக­வல்கள் இருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. தாக்­கு­தல்கள் தொடர்­பான உள­வுத்­துறை தக­வல்கள் இந்­தி­யாவில் இருந்தே பெறப்­பட்­டுள்­ளன. எனவே சாரா­வுக்கும் இந்­திய உள­வுத்­து­றைக்கும் இடையில் தொடர்­புகள் இருக்கும் என்றால் அது குறித்து விசா­ர­ணை­களும் நடத்­தப்­பட வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு முன்­ன­ணியின் செய­லாளர் என்று தன்­னைத்­தானே கூறிக்­கொண்ட நாமல் குமா­ரவின் மர்­ம­மான செயற்­பா­டுகள் குறித்த விசா­ர­ணை­களின் முடி­வுகள் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அவர் எங்­கி­ருந்தோ திடீ­ரெனத் தோன்றி பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் தலைவர் நாலக சில்வா மீது குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்தார். அப்­போ­தைய ஜனா­தி­ப­தி­யான மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக்ஷ ஆகி­யோரைக் கொலை செய்­வ­தற்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சதித்­திட்டம் தீட்­டி­யுள்­ள­தாக அவர் கூறினார்.

நாமல் குமா­ர­வுக்கு ஊட­கங்கள் மூலம் கணி­ச­மான விளம்­பரம் கொடுக்­கப்­பட்டு இறு­தியில் நாலக சில்­வாவே கைதும் செய்­யப்­பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பிறகு குரு­நா­கலில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களின் போது திடீ­ரென தோன்­றி­யது தவிர, நாமல் குமார பொது­மக்­களின் பார்­வையில் இருந்து மறைந்தே இருந்தார்.

இந்த சம்­ப­வங்­க­ளுக்குப் பின்னர் நாமல் குமார என்­பவர் பொலி­சா­ருக்கு தகவல் வழங்­கு­பவர் என்­பது தெரி­ய­வந்­தது. நாலக சில்­வா­வுக்கு எதி­ராக நாமல் குமார கூறிய குற்­றச்­சாட்­டு­களில் தீவிரம் இருந்­த­போ­திலும் இன்­று­வரை நாமல் குமார மீதோ அல்­லது நாலக சில்வா மீதோ எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஸஹ்­ரானை கைது செய்­வ­தற்­கான தேடு­தல்கள் சூடு பிடிக்­கத்­தொ­டங்­கிய நேரங்­களில் எல்லாம் நாமல் குமார தனது கோமா­ளித்­த­னங்­களை வெளிப்­ப­டுத்தி அவற்றை திசை திருப்­பினார். நாலக்க சில்­வாவின் கைது மற்றும் அது தொடர்­பான விட­யங்கள் என்­பன ஸஹ்ரான் தொடர்­பான விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கு­வதை செய­லி­ழக்கச் செய்­தன.

இங்கு விடை­கா­ணப்­பட வேண்­டிய கேள்வி என்­ன­வென்றால் நாமல் குமா­ரவின் குற்­றச்­சாட்­டுகள் ஸஹ்­ரானை கைது செய்­வ­தி­லி­ருந்தும் பொலி­ஸாரின் கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்­கான பொய்ப் பிர­சா­ரங்­களா என்­ப­துதான்.

இன்று பெரும்­பா­லான மக்­களின் மனதில் எழுந்­தி­ருக்கும் கேள்வி என்­ன­வென்றால் தாக்­கு­தல்­க­ளுக்கு மூல­கா­ர­ண­மாக செயற்­பட்ட சூத்­தி­ர­தாரி யார் என்­ப­துதான். நௌபர் மௌல­விதான் இந்த தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டி­ருக்­கிறார் என்று பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர கரு­து­கின்ற போதிலும் இந்தக் கூற்றை நிரூ­பிக்க எந்­த­வொரு ஆதா­ரமும் இது­வரை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் இலங்­கையில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முகம்­மது நௌபர் அல்­லது நௌபர் மௌலவி சூத்­தி­ர­தா­ரி­யாக இருந்தார் என்­பதை அமெ­ரிக்­காவின் பெடரல் புல­னாய்வுப் பிரிவு (எப்.பி.ஐ) உறு­தி­செய்­த­தாக அமைச்சர் வீர­சே­கர, மே 19 அன்று பாரா­ளு­மன்­றத்தில் கூறினார்.

“எங்கள் விசா­ர­ணைகள் மற்றும் அமெ­ரிக்க விசா­ர­ணை­களின் படி இதன் சூத்­தி­ர­தாரி நௌபர் மௌலவி என்­பது தெளி­வா­கி­றது. அதை ஸஹ்­ரானின் மனை­வியும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த தாக்­கு­தலில் நௌபர் முக்­கிய பங்கு வகித்­ததை அமெ­ரிக்க புல­னாய்வு துறை­யான எப்.பி.ஐ உறுதி செய்­துள்­ளது” என்றே அமைச்சர் அன்­றைய தினம் தெரி­வித்தார்.

இந்த விவ­காரம் குறித்து கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்­திடம் இலங்கை ஊட­கங்கள் கேள்வி எழுப்­பின. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டவர் நௌபர் மௌல­விதான் என்­பதை எப்.பி.ஐ உறுதி செய்­துள்­ளதா என்ற சந்­தே­கத்­திற்கு தூத­ரகம் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்­தது:

“உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து விசா­ர­ணை­க­ளுக்­காக இலங்கை அர­சாங்கம் எங்­க­ளது ஆத­ரவை நாடி­யது. எப்.பி.ஐ உட­ன­டி­யாக அதற்கு பதி­ல­ளித்­தது. இந்த மிலேச்­சத்­த­ன­மான பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை விசா­ரிக்க இலங்கை அதி­கா­ரி­க­ளுடன் திறம்­பட எப்.பி.ஐ ஒத்­து­ழைத்­தது.”

“ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வாதக் குழு­விற்கு உதவி வழங்கி சதி செய்த குற்­றச்­சாட்டில் மூன்று இலங்­கை­யர்­களை கைது செய்­தது தொடர்­பான அறிக்கை ஒன்றை ஜன­வரி 8 அன்று அமெ­ரிக்க நீதித்­துறை வெளி­யிட்­டது.”

“இன்று, இந்த உயி­ரி­ழப்­பு­க­ளுக்கு பொறுப்பில் இந்த பிர­தி­வா­திகள் தங்கள் பங்கைக் கொண்­டி­ருப்­ப­தாக நாங்கள் குற்றம் சாட்­டு­கிறோம். இந்த குற்­றச்­சாட்­டு­க­ளின்­படி பிர­தி­வா­திகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் ஆத­ர­வா­ளர்கள் ஆவர். ஐ.எஸ்.ஐ.எஸ் இன் செல்­வாக்­கினை உப­யோ­கித்து வேறு சில­ரையும் இத­னுடன் இணைத்­துள்­ளனர். வெடி­குண்­டு­களை தயா­ரிக்கத் தேவை­யான பொருட்­க­ளையும் கொள்­வ­னவு செய்­துள்­ளார்கள். தாக்­கு­தல்­களில் பங்­கேற்ற மற்­ற­வர்­களை தயார் செய்து பயிற்சி அளிக்­கவும் இவர்கள் வழி­யேற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள். மேலும் இந்தக் கொடிய வெளி­நாட்டு பயங்­க­ர­வாத அமைப்பின் தூண்­டு­த­லா­லேயே அனை­வரும் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள்” என்று தூத­ரகம் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

“குற்­ற­வியல் முறைப்­பாட்டில் பெய­ரி­டப்­பட்ட மூன்று பிர­தி­வா­தி­களும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வாதக் குழு­வுக்கு விசு­வா­ச­மாக இருக்க வேண்டும் என்று உறு­தி­மொழி எடுத்­த­வர்கள் ஆவர், அவர்கள்

1. முக­மது நௌபர், ‘இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்று தம்மை அழைத்துக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் ஆத­ர­வா­ளர்­களின் குழுவின் இரண்­டா­வது அமீ­ராக இவர் செயற்­பட்டார். குழுவின் பிர­சார முயற்­சி­க­ளுக்கு தலைமை தாங்­கி­ய­துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இல் ஏனையோர் இணை­வ­தற்கும் வழி சமைத்தார். மேலும் நீண்ட நாட்கள் தொட­ராக இடம்­பெற்ற இரா­ணுவ வகை பயிற்­சிக்கும் இவர் தலைமை தாங்­கி­யுள்ளார்.
2. முகமட் அன்வர் முகமட் ரிஸ்கான், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பயன்­ப­டுத்­தப்­பட்ட வெடி­குண்­டு­களை தயா­ரிக்கத் தேவை­யான பொருட்­களை கொள்­வ­னவு செய்து உத­வி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.
3. அஹமட் மில்ஹான் ஹயாத்து மொஹமட், பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் துப்­பாக்­கியைப் பறிப்பதற்­காக அவரைக் கொலை செய்­துள்ளார். பொலி­சா­ருக்கு தகவல் வழங்­கிய மற்­றொ­ருவர் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­யுள்ளார். மேலும் பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லுக்கு பொருத்­த­மான இடங்­களை தேடி தெரிவு செய்யும் நட­வ­டிக்­கை­க­ளிலும் இவர் ஈடு­பட்­டுள்ளார்,”

ஆக, அமெ­ரிக்க நீதித்­து­றை­யினால் இந்த ஆண்டு ஜன­வ­ரியில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் இந்த தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக முக­மது நௌபர் அல்­லது நௌபர் மௌலவி என்­பவர் வெளிப்­ப­டை­யாக அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை.
அமெ­ரிக்க நீதித்­துறை வெளி­யிட்ட அறிக்­கைக்கு அப்பால் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யாக நௌபர் மௌல­வியை வெளிப்­ப­டை­யாக அடையாளம் காண முடியவில்லை. அறிக்கையில் உள்ள சில விடயங்கள் இலங்கையில் இடம்பெற்ற விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களில் இருந்து வேறுபடுகின்றன.

அந்த அறிக்கைகளில் ‘இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு குழு இருந்­தது பற்றி எந்­த­வொரு குறிப்போ ஆதா­ரங்­களோ இல்லை. ஏனென்றால், இலங்கை புல­னாய்­வா­ளர்கள் நாட்டில் இது­போன்ற ஒரு குழு இருக்­கி­றது என்­பதை ஒரு­போதும் கண்­டு­பி­டிக்­க­வில்லை. இலங்­கையின் புல­னாய்­வா­ளர்­களின் கூற்­றுப்­படி தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய ஒரே­யொரு குழு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.ரி.ஜே) மாத்­தி­ரமே ஆகும்.
இந்த நேரத்தில் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் அவர்­களும் அவ­ரது குழு­வி­னரும் உண்­மைகள் வெளி­வரும் வரை காத்­தி­ருக்­கி­றார்கள். மேலும் இப்­ப­டி­யொரு மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­ப­தையும் ஏன் இப்­ப­டி­யொரு குற்றம் நடந்­தது என்­ப­தையும் தெரிந்து கொள்ள முஸ்லிம்களும் ஆவலுடன் இருக்கிறார்கள். நன்றி: சண்டே டைம்ஸ் 01.08.2021 -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.