(எம்.ஐ.அப்துல் நஸார்)
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், உகண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து துபாய்க்குப் பயணிப்பவர்கள் தமது வருகையின் போது கொவிட் -19 பரிசோதனை சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை, ஆனால் வருவதற்கு முன்னதாக நுழைவு அனுமதிக்காக பதிவு செய்திருத்தல் வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருப்பவர்களுக்கு மாத்திரம் என்ற வகையில் வெளிநாட்டவர்களுக்கான நுழைவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அமீரக விமான நிறுவனம் அறிவித்துள்ளது, அவர்கள் புறப்படுவதற்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பே அவர்களுக்கு கொவிட் -19 பரிசோதனை சான்றிதழ் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என டைம்ஸ் ஒப் ஓமான் செய்தி வெளியிட்டுள்ளது.
‘கொவிட் பரிசோதனை சான்றிதழின் மூலப் பிரதியுடன் QR குறியீட்டினையும் இணைத்து வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து COVID -19 PCR பரிசோதனை அறிக்கைகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. ‘விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் தங்கள் COVID -19 PCR பரிசோதனையினை செய்திருத்தல் வேண்டும்.’
ரெபிட் அன்டிஜென் சோதனை அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மற்றொரு PCR பரிசோதனை துபாய்க்கு வந்தவுடன் எடுக்கப்படல் வேண்டும்.
‘மேற்படி தேவைப்பாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்களுக்கு விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது ஆனால் துபாய்க்கு வந்தவுடன் COVID -19 PCR பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவர்’ என அமீரக வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli