ந­பி­க­­ளாரை அவ­ம­திக்கும் பதி­­வு: முகநூல் கணக்கு நீக்­கப்­பட்­ட­து

0 544

­ந­பி­க­­ளாரை அவ­ம­திக்கும் வகையில் அவ­தூ­றான கருத்­துக்­களைப் பத­ிவி­ட்ட போலி­ முகநூல் கணக்­கினை பேஸ் புக் நிறு­வனம் அகற்­றி­யுள்­ள­துடன் வேறு சில கணக்­கு­களை தற்­கா­லி­க­மாக தடை செய்­துள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­ற­து.
கடந்த வாரம் ந­பி­க­­ளாரை அவ­ம­திக்கும் வகையில் போலி முகநூல் கணக்­கி­லி­ருந்து இடப்­­பட்ட பதிவை காரை­தீவு பிர­தேச சபை தவி­சாளர் கிருஷ்­ண­பிள்ளை ஜெய­சிறில் பகிர்ந்­ததை தொடர்ந்து இது தொடர்பில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மற்றும் செயற்­பாட்­டா­ளர்களால் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டு­களும் பதிவு செய்­யப்­பட்­ட­ன.

இவ்வி­வ­காரம் சர்ச்­சைக்­குள்­ளா­ன­தை­ய­டுத்­து குறித்த பேஸ்புக் பதிவை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் உடன் நீக்­கியிருந்­தனர். அத்­துடன் காரை­தீவு பிர­தேச சபை தவி­சாளர் கிருஷ்­ண­பிள்ளை ஜெய­சிறில் தனக்குத் தெரி­யா­ம­லேயே குறித்த பதிவு தனது முக­நூல் பக்­கத்தில் பகி­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இத­னிடையே குறித்த விவ­காரம் சமூக வலைத்­த­ளங்­களில் தமிழ் , முஸ்லிம் முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கலாம் என அஞ்­சிய மனித உரிமைகள் செயற்­பாட்­டா­ளர்கள் இது தொடர்பில் பேஸ்புக் நிறு­வ­னத்தில் புது­டில்லி அலு­வ­ல­கத்­துக்கு முறை­யிட்­டனர். இதனைத் தொடர்ந்து அவ­தூறு கருத்தைப் பதி­­விட்ட போலி முகநூல் கணக்கும் அதில் பதி­வி­டப்­பட்­டி­ருந்த சகல பதி­வு­களும்பேஸ் புக் நிறு­வ­னத்­தினால் நீக்­கப்­பட்­டுள்­ள­ன.
அதே­போன்று இந்த விவ­காரத்­துடன் தொடர்­பு­பட்டு இன மத முரண்­பா­டு­களை தோற்­று­விக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்ட மேலும் சில முகநூல் கணக்­கு­களும் தற்­கா­லி­க­மாக தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக புது­டில்­லியில் உள்ள பேஸ்புக் அலு­வ­ல­கத்தின் தக­வல்கள் தெரி­­விக்­கின்­றன. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.