தேசிய முஸ்லிம் பேரவை அங்குரார்ப்பணம்

0 417

இலங்கை தேசிய முஸ்லிம் பேரவை அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன், முத­லா­வது வரு­டாந்தப் பொதுக்­கூட்டம் அண்­மையில் கொழும்பு – 7 இலுள்ள ஜெட்விங் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

முதன் முறை­யாக நாட்டில் வாழும் முஸ்லிம் சமூ­கத்தின் நான்கு பிர­தான பகு­தி­யி­ன­ரான இலங்கைச் சோனகர், இலங்கை மலாயர், இலங்கை மேமன், மற்றும் இலங்கை தாவூதி (போரா) ஆகிய சமூ­கத்­தினர் ஒன்­றி­ணைந்த ஒருங்­க­மைப்­பாக இப்­பே­ரவை இயங்­கு­மென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், இந்த தேசிய முஸ்லிம் பேரவை, அர­சியல் சார்­பற்ற, சமயப் பிரி­வுகள் சார்­பற்ற சிவில் அமைப்­பாக இயங்கும். இது சமூகம் சார்­பான அனைத்து விட­யங்­க­ளிலும் சிறப்­பான சிவில் பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்கும் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

‘பேர­வையின் நிர­்மா­ணிப்­பா­ளர்கள்’ என அழைக்­கப்­பட்ட இலங்கை முஸ்­லிம்­க­ளது பல்­வ­கை­மை­யி­னரின் ஊடாகக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட இந்த பேரவை, இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள மிகச் சிறந்த ஆளு­மை­யுள்ள வளங்­களைக் கொண்டு, இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­காக மட்­டு­மன்றி அனைத்து இலங்­கை­ய­ருக்­கு­மான பொது நன்­மையை நோக்கி அர்ப்­ப­ணிப்­பு­டனும், பொறுப்­பு­டை­மை­யு­டனும் பணி­யாற்ற உறுதி பூண்­டுள்­ளது.
இந்த பேர­வையின் மருத்­து­வ­ரான பேரா­சி­ரியர் கமால்­தீ­னினை தலை­வ­ரா­கவும், அவ­ருடன் இணைந்து சபையில் அப்ஸல் மரைக்கார் (உப தலைவர்), குஸைமா ஜெபர்ஜி (உப தலைவர்), ஸஹரின் ஹமீன் (செய­லாளர்) மற்றும் சப்ரி கௌஸ் (பொரு­ளாளர்) ஆக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை, மொஹமட் அட­மலி, அமான் அஷ்ரப், சுரைஷ் ஹாஸிம், சுஹைல் ஜமால்டீன், ஆயிஷா சத்தார் மற்றும் ஏ.ஜி.எம்.யாசீன் ஆகி­யோரை இந்த பேரவை அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த பேரவை தொடர்பில் பேரா­சி­ரியர் கமால்தீன் கூறு­கையில்,
“நாம் அனை­வரும் ஒரு தேச­மாக வர வேண்­டிய நேரம் வந்து விட்­டது. இலங்கை தேசிய முஸ்லிம் பேர­வையின் ஒரு தோற்­றுவாய். ஏனெனில் இதுவே முஸ்­லிம்­க­ளது நான்கு பிரி­வி­ன­ரையும் உள்ள­டக்கி ஒழுங்­க­மைக்­கப்­பட்ட ரீதியில் உரு­வாக்­கப்­பட்ட முத­லா­வது சிவில் அமைப்­பாகும்.

நாம் அனை­வரும் ஒரு விட­யத்தால் ஒன்று படு­கிறோம். அது நாம் அனை­வரும் இலங்­கையர் என்­ப­தாகும். அதனை அங்­க­கீ­ரித்­தலே அத­ன­ளவில் பெரும் முக்­கி­யத்­துவம் வாயந்­த­தாகும்” என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.