நாடு முற்றாக இயல்பு நிலைக்குத் திரும்ப சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் முன்னுதாரணமாய் அமையுமா ?

0 513

 கெலும் பண்டார, டெய்லி மிரர்

தமிழில் : எம்.ஐ.எம். இர்ஷாத்

கொவிட் பெருந்­தொற்­றுக்குப் பிந்­திய காலத்து உலக ஒழுங்கு முற்­றிலும் புதிய வடி­வத்தைப் பெறப்­போ­கி­றது.  வெகு­வாக மாறு­பட்­ட­தொரு வாழ்­வொ­ழுங்கு இப்­போதே ஆரம்­பித்­தா­யிற்று.  உலகப் பரப்பில் புதி­தாக தோன்­றி­யுள்ள பொரு­ளா­தார சவால்­களும் சமூக, வாழ்­வியல் முறை­களில் ஏற்­பட்­டுள்ள புதிய மாற்­றங்­களும் மிகத்­தெ­ளி­வாகத் தெரிய ஆரம்­பித்­து­விட்­டன. மாறி­வரும் இச்­சூ­ழலை புரிந்­து­கொள்­ளவும் தெளி­வு­ப­டுத்தும் நோக்­கிலும் அக­ரா­தியில் புதிய சொற்­றொ­டர்­களும் , வாக்­கியப் பிர­யோ­கங்­களும் சேர்க்­கப்­பட்டு வரு­கிற சூழலில் கொவிட் பெருந்­தொற்­றுக்குப் பிந்­தைய உலக ஒழுங்கில் மானுட சமூ­கத்தின் அறிதல் முறையும் மாறு­கி­றது எனலாம்.

நிலைமை வழ­மைக்குத் திரும்­ப­வேண்டும். வாழ்க்­கை­யோட்டம் தடைப்­ப­டாது மானுடம் மீள இயங்­க­வேண்­டு­மென்றால், வைரசின் வேகமாப் பரவும் தன்­மையைத் தடுக்­க­வேண்­டு­மெனில்  ஒட்­டு­மொத்த மனித சனத்­தொ­கையும் கிரு­மித்­தொற்­றுக்­கெ­தி­ரான நோயெ­திர்ப்பு நிர்ப்­பீ­டண நிலையை அடை­ய­வேண்டும். உலக சனத்­தொகை முழு­வ­து­மாக கொவிட் தடுப்­பூசி மருந்­தேற்­றிக்­கொள்­வதே அதற்­கான ஒரே வழி­யென கரு­தப்­ப­டு­கிற நிலையை நாம் எட்­டி­விட்டோம். கால வரை­ய­றை­யில்­லாமல் பய­ணக்­கட்­டுப்­பா­டுகள், சந்தை முடக்கம், மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நட­மாட்டம் போன்­றன மேலும் தொடர்ந்தால் மக்கள் பொரு­ளா­தாரம் வெகு­வாகப் பாதிப்­புற்று நலி­வ­டையும் நிலை இன்னும் மோச­மாகி எதிர்­பா­ராத வித­மாக வாழ்க்கைச் செலவு அதி­க­ரிப்­பதும் , அதி­க­மானோர் தொழில்­வாய்ப்பைக் கூட இழக்கும் அபாயம் ஏற்­ப­டு­வதும் உறுதி. இந்­நிலை அவ­ச­ர­மாக இயல்­புக்குத் திரும்ப வேண்­டிய தேவையை இன்னும் வலு­வாக உண­ர­வைத்­து­விட்­டது.

இப்­ப­டி­யொரு பின்­ன­ணியில் நுணுக்­க­மான திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் இயல்பு நிலைக்குத் திரும்பும் முன்­னெ­டுப்பு முதன்­மு­தலில் சிங்­கப்­பூரில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.  அண்­மையில் முழு­மை­யாக வழ­மைக்குத் திரும்பும் புதிய நடை­மு­றை­களை சிங்­கப்பூர் அமுல்­ப­டுத்­தி­யது.  அந்த நாட்டின் கொவிட் தடுப்பு செய­லணி அதி­ர­டி­யான சில நட­வ­டிக்­கை­களை அறி­வித்­தி­ருக்­கி­றது.

நாட்டை முடக்­கு­வ­தில்லை, கொவிட் நோய்த் தொற்­றா­ளர்­களின் தொடர்பு நிலையில் இருந்த எனை­ய­வர்­களைத் தேடும் பொறி­முறை ( mass contact tracing )  நிறுத்­தப்­பட்­டு­விட்­டது. தனி­மைப்­ப­டுத்தல் கட்­டா­ய­மற்ற பய­ணங்­க­ளுக்கும், அதிக  எண்­ணிக்­கை­யானோர் ஒன்­று­கூ­டல்­க­ளுக்கும் அனு­மதி, தின­சரி தொற்­றா­ளர்கள் எண்­ணிக்­கை­யினைக் கணக்­கெ­டுப்­ப­தில்லை. மொத்­தத்தில் கொவிட் தொற்று என்­பது டெங்கு போல இன்­னு­மொரு வைரஸ் தொற்று என்­கிற அள­வில்தான் இனிக் கரு­தப்­படும் என்­பதே உண்­மையில் இதன் அர்த்தம். தொற்­றாளர் எண்­ணிக்­கையும் பரவும் வீதமும் பூச்­சி­யத்தை எட்டும் வரை இயல்பு நிலைக்குத் திரும்­பாமல் காத்­தி­ருப்­ப­தென்­பது நடை­மு­றையில் சாத்­தி­ய­மற்­றது என்­கிற அடிப்­ப­டை­யி­லேயே இத்­த­கைய தீர்­மா­னத்­துக்கு அவர்கள் வந்­தி­ருக்­கி­றார்கள்.

“கொவிட் எம்­மை­விட்டு ஒரு­போதும் நீங்கப் போவ­தில்லை என்­பது எப்­படி ஒரு துன்­ப­மான செய்­தியோ அதே­போ­லவே அது அப்­ப­டியே எம்­மத்­தியில் இருக்­கும்­போதே நாம் இயல்­பாக வாழ்க்­கையை கொண்டு செல்­வதும் சாத்­தி­ய­மா­னதே என்­பதும் ஒரு நல்ல செய்­தி­யாகும்”  இது அண்­மையில் சிங்­கப்­பூரின் வர்த்­தக, நிதி, சுகா­தார அமைச்­சர்கள் மூவரும் இணைந்து The Straits Times பத்­தி­ரி­கையில் தெரி­வித்த கருத்­தாகும்.

அதே போலவே ஐக்­கிய இராச்­சி­யமும் (UK) சட்­ட­ரீ­தி­யான கட்­டுப்­பா­டு­க­ளையும், சமூக தொடர்­பால்­களை தடை­செய்யும் விதி­மு­றை­க­ளையும் நீக்­கு­வ­தற்குத் திட்­ட­மிட்டு வரு­வது அவ­தா­னத்­துக்­கு­ரி­யது. மருத்­துவ சேவை வழங்கும் இடங்கள் மற்றும் பய­ணிகள் நாட்டின் உள்ளே நுழையும் விமான நிலை­யங்கள், சாலை­வழி எல்லை, துறை­மு­கங்கள் போன்ற இடங்­களைத் தவிர ஏனைய இடங்­களில் ஒரு மீற்றர் சமூக இடை­வெளி பேணும் கட்­டாய விதி­மு­றை­யையும் விரைவில் நீக்­கி­விடத் திட்­ட­மி­டு­கி­றார்கள். மாஸ்க் அணி­வதைக் கட்­டா­ய­மாக்கும் விதி­முறை நீக்­கப்­ப­டு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள்  கூட தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.  இரவு களி­யாட்ட விடு­தி­களும் மீளத் திறக்­கப்­பட இருக்­கி­றது.  போசன சாலைகள் , ஹோட்­டல்­களில் உள்ளே அமர்ந்து பரி­மா­று­வ­தற்கு இடப்­பட்­டி­ருந்த தடை நீக்­கப்­பட்டு, திரு­மண நிகழ்­வுகள் மற்றும் மரண இறுதிக் கிரி­யை­களில் பங்­கெ­டுப்­ப­வர்­களின் எண்­ணிக்கை வரை­ய­றை­களும் நீக்­கப்­பட இருக்­கி­றது.

கொவிட் பெருந்­தொற்று பரவும் சூழலில் இருக்கும் ஏனைய நாடு­களும் இத்­த­கைய நடை­மு­றை­க­ளூ­டாக இயல்பு நிலைக்குத் திரும்ப இவ்­விரு நாடு­களும் பின்­பற்­றத்­தக்க முன்­மா­தி­ரி­யாக அமை­யுமா என்­பதே இங்கு எம்­முன்னால் எழும் வினா­வாகும். இது உண்­மையில் சாத்­தி­ய­மா­ன­தென்றே கூற­வேண்டும்.

இவ்­விரு நாடு­க­ளிலும் மொத்த சனத்­தொ­கையில் மிகப் பெருந்­தொ­கை­யா­ன­வர்­க­ளுக்கு கொவிட் தடுப்­பூசி ஏற்றும் பணி­மூ­லமே இது சாத்­தி­ய­மா­னது. விளை­வாக நாட்டில் தொற்றுப் பரவும் வீதமும் , மர­ண­வீ­தமும் வெகு­வாகக் குறையும் நிலையும் சாத்­தி­ய­மா­னது. இந்தப் பிண்­ண­னி­யில்தான் அவர்கள் கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்பும் முடி­வுக்கு வரு­கி­றார்கள்.  சனத்­தொ­கையின் 60% ஆன­வர்கள் தடுப்­பூசி ஏற்­றிக்­கொண்ட நிலையை அடைந்த நாடுகள் அப்­ப­டி­யான தளர்வு நிலைக்கு வரு­வது சாத்­தி­ய­மாகும். இருப்­பினும் அதிக நாடுகள் மக்­களின் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்தும் விதி­மு­றை­க­ளைத்தான் தொடர்ந்தும் பேணி­வ­ரு­கின்­றன.

இந்தப் பின்­ன­ணியில், இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் பொரு­ளா­தார கண்­ணோட்­டத்தில் நோக்­கு­கையில் கொவிட் கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களை தொடர்­வ­தென்­பது உண்­மையில் மிகவும் பார­தூ­ர­மா­ன­தாகும். இருப்­பினும் நாம் தீர்­மா­னத்­துக்கு வரு­வதில் இரு­முனை அழுத்­தங்கள் கடு­மை­யான தாக்கம் செலுத்­து­கி­றது. ஒரு புறம் சுகா­தா­ரத்­து­றை­யினர் தொற்றுப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த மேலும் இறுக்­க­மான கட்­டுப்­பா­டு­களைப் பரிந்­து­ரைக்­கின்ற அதே­வேளை பொரு­ளா­தார விருத்தி கொள்கை வகுப்­பா­ளர்­களும், வரத்­தக வாணிப துறை சார்ந்­தோரும் நாட்டை கிட்­டிய சீக்­கி­ரத்­தி­லேயே இயல்­பு­நி­லைக்குத் திறந்து விடும்­படி அழுத்தம் கொடுக்­கி­றார்கள். இரு சாராரும் நியா­ய­மான காரா­ணங்­க­ளையே முன்­வைக்­கி­றார்கள் என்­பதும் உண்­மை­யாகும்.

எது எப்­படி இருந்­தாலும், இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் மிக அவ­ச­ர­மாக நாட்டை முழு­மை­யாகத் திறக்க வேண்­டிய இக்­கட்­டான நிலைக்கு நாடு வந்­து­விட்­டது. மேற்­சொன்ன இரு சாராரும் இழு­ப­றி­யற்று ஒன்­றி­ணைந்த அவ­ச­ர­மான முடி­வொன்றை எட்டி இயல்பு நிலைக்குத் திரும்­பு­வதே அவ­ச­ரத்­தேவை. மிகப்­பெரும் நஷ்­டத்தை அடைந்­துள்ள சுற்­று­லாத்­துறை பற்றி நாம் சிந்­தித்­தாக வேண்டும். கொவிட் பெருந்­தொற்று முடக்கம் கார­ண­மாக சுற்­று­லாத்­து­றைக்கு ஏற்­பட்ட 4.5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் நஷ்­டமே  தற்­போது நாடு எதிர்­நோக்கும் அந்­நியச் செலா­வணி வளர்ச்­சி­வீத வீழ்ச்­சியின் சிக்கல் நிலைக்கு முக்­கிய கார­ண­மாகும்.

கடந்த வாரம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்‌ஷ இது தொடர்பில் கருத்துத் தெரி­வித்­த­போது நாட்டைப்  பூட்டி வைத்­துக்­கொண்டு பொரு­ளா­தா­ரத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்­து­வது அர­சாங்­கத்­தினால் முடி­யாத காரி­ய­மாகும் , திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் எதிர்­வரும் செப்­டம்பர் மாத முடிவில் நாட்டின் சனத்­தொ­கையில் 60% ஆனோ­ருக்கு கொவிட் தடுப்­பூசி ஏற்றி நாடு முழு­மையாக் திறக்­கப்­படும் சாத்­தியம் இருப்­ப­தாக நேர்­ம­றை­யான நம்­பிக்­கை­யூட்டும் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

மிகக் கடு­மை­யாகப் பரவும் புதிய வைரஸ் மாற்­று­ருவம் பெறு­வது அதி­க­ரிக்கும் இச்­சூ­ழலில் 60% க்கு மேலானோர் தடுப்­பூசி ஏற்­றப்­பட்ட நிலை­யி­லேயே நாம் அந்த முடி­வுக்கு வர­மு­டியும் என்­பது உண்­மையே.  தடுப்­பூசி விநி­யோகம் தடைப்­ப­டாமல் எமக்குக் கிடைப்­பதில் தடங்­கல்கள் ஏற்­ப­டாத வரை­யிலும் குறிப்­பிட்ட கால எல்­லைக்குள் நாம் இலக்கை அடையமுடியும். ஆனாலும் நிலைமை மாற்றமடையவும் வாய்ப்பிருக்கிறது.

இலங்கை வெளிநாட்டு தடுப்பூசி விநியோகஸ்தர்களையே அதிகம் நம்பி இருப்பதே இதற்குக் காரணமாகும். உதாரணமாக இலங்கை ரஷ்யாவிடம் 14 மில்லியன் ஸ்புட்னிக்-வீ தடுப்பூசிகள் கொள்வனவுக்கான ஏற்பாடுகள் செய்துள்ளது. இருப்பினும் அந்நாட்டில் திடீரென தொற்றுவீதம் அதிகரித்தமையால் எமது தேவைக்கான அளவு தடுப்பூசிகளை அவர்களால் விநியோகம் செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.  இவ்வருட ஆரம்பத்தில் இந்தியாவில் தொற்று மிக அதிகளவில் உயர்வடைந்தபோது அஸ்ரா-ஸனிகா தடுப்பூசி தயாரிப்பாளரான சேரம் நிறுவனத்தினால் இலங்கையின் தேவைக்காக ஏற்கெனவே கோரப்பட்டிருந்த அளவு விநியோகிக்க முடியாமல் போனது. இவ்வாறான எதிர்பாராத மாற்றங்கள் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கான கால எல்லையை சரியாக நிர்ணயிப்பதில் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது. –  Vidivelli

Leave A Reply

Your email address will not be published.