அஹ்னப்பின் உளவியல் அறிக்கை – எழுத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

0 530

ஆங்கிலத்தில்: பமோதி வரவிட்ட
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் கடந்த 13 மாதங்­க­ளாக தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் (PTA) 7 (2)ஆம் பிரிவின் கீழேயே அவர் மன்­றுக்கு ஆஜர் செய்­யப்­பட்டார்.

அஹ்னாப் ஜஸீமின் ‘நவ­ரசம்’ எனும் கவிதை நூல் தொடர்பில் உள­வி­ய­லா­ளரின் அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இந்த உள­வியல் அறிக்கை இத்­துறை சார்ந்த பலரால் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் கண்­டித்­துள்­ளார்கள். திற­மையும் ஆற்­ற­லு­முள்­ள­வர்­களின் சுதந்­திரத்துக்கு அச்­சு­றுத்தல் எனவும் குற்றம் சுமத்­தி­யுள்­ளார்கள்.
எழுத்­தாளர், நூலா­சி­ரியர், பட இயக்­குநர் மற்றும் கொழும்பு பல்­க­லைக்­க­ழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரு­மான கலா­நிதி விச­கேச சந்­தி­ர­சே­கரம் மற்றும் GRATIAEN பரிசு பெற்ற நூலா­சி­ரியர் (Upon A Sleepless Isle) மற்றும் விளை­யாட்டு ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான அன்ட்ரு பிடெல் பர்­ணாந்து ஆகியோர் அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் வெளி­யிட்­டுள்ள உள­வி­ய­லா­ளரின் அறிக்கை பற்றி கவலை வெளி­யிட்­டுள்­ளனர். இந்த அறிக்கை நாட்டில் எழுத்­தாளர் ஒரு­வரை தணிக்கை செய்வதற்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாகும் எனவும் தெரி­வித்­துள்­ளனர். உள­வி­ய­லா­ளரின் இவ்வாறான அறிக்கை நாட்டில் எழுத்­தாளர் ஒரு­வரை தணிக்கை செய்­வ­தற்கு உப­யோ­கப்­ப­டுத்­தலாம் அவ­ரது குரலை மதிப்­பற்­ற­தாக்­கலாம் என அன்ட்ரு பிடெல் பர்­ணாந்து தெரி­வித்­துள்ளார்.

நவ­ரசம் கவிதை நூல் தொடர்­பான உள­வி­ய­லா­ளரின் அறிக்கை அவரை சிறை­யி­லி­டு­வ­தற்­கான அத்­தாட்­சி­யாகும். அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­வைகள் அவ­ரது கவிதை நூலில் அடங்­கி­யுள்­ளன என்­பதை ஆதா­ரத்­துடன் நிரூ­பிக்க முடி­யா­துள்­ளது.
இலங்­கையின் சிறு­பான்­மை­யி­னரின் குரல்கள் அடிக்­கடி நியா­ய­மற்று அடக்­கப்­ப­டு­கி­றது. ‘ஜஸீமின் கைதும், அவ­ரது தடுப்­புக்­கா­வ­லையும் கருத்து சுதந்­தி­ரத்தை விரும்பும் எவரும் அனு­ம­திக்­க­மாட்­டார்கள். அவர்கள் கவலை கொள்­வார்கள்’ எனவும் பர்­ணாந்து தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் இடம்­பெற்ற ஊடக மாநா­டொன்றில், அஹ்னாப் ஜஸீமின் கைது மற்றும் நீண்ட நாட்கள் தடுப்­புக்­காவல் தொடர்பில் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­க­ர­விடம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அஹ்னாப் ஜஸீமின் கவி­தைகள் அடங்­கிய நவ­ரசம் நூல் வன்­மு­றை­களைத் தூண்­டி­யுள்­ள­தா­கவும் வெறுப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் பாது­காப்பு துறை­யினர் குற்றம் சுமத்­தி­யுள்­ளமை தொடர்பில் அமைச்சர் சரத் வீர­சே­க­ர­விடம் வின­வப்­பட்­டது.

இதற்கு அமைச்சர் வீர­சே­கர பதி­ல­ளிக்­கையில் ‘இலங்­கையில் தேவை­யற்ற தடுப்­புக்­கா­வல்கள் இடம்­பெ­று­வ­தில்லை’ என்றார்.

‘இவர் ஒரு கவிஞர் என்று நான் நினைக்­கின்றேன். அவர் கவிதை நூல்கள் மற்றும் சிறுவர் புத்­த­கங்கள் எழு­தி­யுள்ளார். நவ­ரசம் நூலில் அடங்­கி­யுள்ள கவி­தைகள் சிறு­வர்­களின் மனங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யன என்று நான் விளங்கி­யுள்ளேன். உள­வி­ய­லாளர் கூட தனது அறிக்­கையில் இத­னையே தெரி­வித்­துள்ளார். இவ்­வா­றா­ன­வர்கள் சிறு­வர்­களின் மூளையைச் சலவை செய்து இளம் வய­திலே அவர்­களை தீவி­ர­வா­தி­க­ளாக உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர். மீண்டும் நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல் போன்­ற­தொன்­றினை நடாத்த முயற்­சிக்கும் அனை­வ­ருக்கும் எதி­ராக நாம் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்வோம் எனவும் அமைச்சர் வீர­சே­கர தெரி­வித்தார்’

அஹ்னாப் ஜஸீமின் குறிப்­பிட்ட கவிதை நூலில் நான்கு எதிர்­ம­றை­யான செய்­திகள் அடங்­கி­யுள்­ள­தாக உள­வி­ய­லா­ளரின் அறிக்கை தெரி­வித்­துள்­ளது. கவி­தை­நூலில் அவர் உப­யோ­கித்த வச­னங்கள் ஆங்­கி­லத்தில் அண்­மையில் சாஸ் டிர­வெட் (Shash Trevett) என்­ப­வரால் ஆங்­கி­லத்தில் மொழி பெயர்க்­கப்­பட்­டுள்­ளது.

இமா­ல­யத்தைத் தகர்த்தல் (Smashing Himalayas) எனும் சொல் வாச­கர்­க­ளுக்கு வன்­மு­றையைத் தூண்­டு­வ­தாக அமைந்­துள்­ளது என உள­வி­ய­லா­ளரின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இமா­லய மலைகள் தொகுதி மிகப் பெரி­ய­ன­வாகும்.
“நீங்கள் ஆறு ஒன்­றி­னைப்போல் இருந்தால்
உங்கள் உங்கள் ஆசைகள் எது­வாக இருந்­தாலும் அடைந்­து­கொள்­ளலாம்.
இமா­ல­யங்கள் உங்கள் வழி­யினைத் தடை­செய்­தாலும் உங்­களால் அவற்றை இல­கு­வாக தகர்த்­திட முடியும்”
உள­வி­ய­லா­ளரின் அறிக்கை கவிதை நூலின் சிங்­களம் மற்றும் ஆங்­கி­ல­மொழி பெயர்ப்பின் மூலமே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் பல வித்­தி­யா­சங்கள் முரண்­பா­டுகள் உள்­ளன. பல்­வேறு அர்த்­தங்­களும் அடங்­கி­யி­ருக்­கலாம்.

அஹ்னாப் ஜஸீமின் கைது பல்­வேறு தரப்­பி­னரால் கண்­டு ­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சியல் இலக்­கினை அடைந்து கொள்­வ­தற்­கா­னது என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அனைத்து கலை­ஞர்­க­ளி­ட­மும் ஒரு அர­சியல் நிகழ்ச்சி நிரல் இருக்­கி­றது. அது அவர்­களின் கருத்துச் சுதந்­தி­ர­மாகும் என கலா­நிதி சந்­தி­ர­சே­கரம் தெரி­வித்­துள்ளார்.
‘ எனது அனைத்து செயற்­பா­டு­களும் நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு பங்­க­ளிக்கும் வகை­யிலே உள்­ளன. எனது எழுத்­துக்கள் அவ்­வாறே, சில சந்­தர்ப்­பங்­க­ளிலே நாம் தெரி­விப்­ப­வை­களை வரை­ய­றுத்துக் கொள்­கிறோம். அல்­லது கட்­டுப்­ப­டுத்திக் கொள்­கிறோம். இதே­வேளை இவ்­வி­டத்தில் நான் தணிக்கை (Censor)என்று சொல்­லைப்­பயன்­ப­டுத்த விரும்­ப­வில்லை. எனது கதை­களை எடுத்­துக்­கொண்டால் அவற்றில் சில பகு­திகள் சட்­டத்தை மீறு­வ­தாக அமைந்­துள்­ள­தாக நினைக்­கலாம். கரு­தலாம். என்­றாலும் நான் குற்றம் சுமத்­தப்­ப­ட­வில்லை. இதற்கு சாத்­தி­ய­மான கார­ணங்கள் இருக்­கலாம். நான் ஆங்­கி­லத்தில் எழு­தி­ய­தற்­காக இருக்­கலாம். இதனால் நான் குறிப்­பாக இலக்கு வைக்­கப்­ப­ட­வில்லை என்றார்.

அஹ்னாப் ஜெஸீம் இலக்கு வைக்­கப்­ப­டு­வ­தற்கும் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கும் அர­சியல் கார­ணி­களே பின்­ன­ணி­யாக இருந்­தி­ருக்­கலாம் எனவும் கலா­நிதி சந்­தி­ர­சே­கரம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
அவர் சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்­தவர் என்­ப­த­னாலே கைது செய்­யப்­பட்­டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இங்கு கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்டு பிடிப்­ப­தற்கு அதி­கா­ரிகள் மீது அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. அதி­கா­ரி­க­ளுக்கு ஜெஸீம் அவர்­க­ளது பணி­யினைச் செய்­த­வற்கு இல­கு­வான இலக்­கா­க்கி­யுள்ளார்.

கலா­நிதி சந்­தி­ர­சே­க­ரத்தின் கூற்­றுப்­படி சட்­டத்தில் இரு பிர­தான பிரச்­சி­னைகள் உள்­ளன. விசா­ர­ணை­க­ளின்றி அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக அவரை எவ்­வாறு தடுத்து வைத்­தி­ருக்க முடியும். அத்­தோடு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருப்­பவர் மீதான சட்ட நட­வ­டிக்­கைகள் நியா­ய­மா­ன­தாக இல்லை. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் (PTA) தடுத்து வைப்­ப­தற்­கான கால எல்லை நீடிக்­கப்­ப­டு­வ­தற்கு அனு­ம­தி­யுள்­ளது என்­றாலும் தடுப்­புக்­காவல் கால எல்லை எவ்­வித விசா­ர­ணைகள் அல்­லது உரிய சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டா­மலே நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இது நீதி மறுக்­கப்­பட்­ட­மை­யாகும். உரிய சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டா­மை­யினால் ஜெஸீம் நீதி­ம­றுக்­கப்­பட்ட ஒரு­வ­ராக்­கப்­பட்­டுள்ளார்.

ஜெஸீமின் தடுப்­புக்­காவல் தற்­போது ஒரு வரு­டத்­துக்கும் மேலாக உயர்ந்­துள்­ளது. ஜெஸீமின் சட்­டத்­த­ர­ணிகள் அவ­ரது உடல் நலம் மற்றும் பாது­காப்பு தொடர்பில் பல சந்­தர்ப்­பங்­களில் நீதி­மன்றில் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளார்கள். ஜெஸீம் மேசையில் சங்­கி­லி­யினால் ஒரு­வார காலத்­துக்கும் மேலாக பிணைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவ­ருக்கு காலை நேர தேநீர்­கூட வழங்­கப்­ப­ட­வில்­லை­யெ­னவும் முறைப்­பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. நன்றி சண்டே மோர்னிங் –  Vidivelli

Leave A Reply

Your email address will not be published.