கொவிட் ஜனாஸாக்களை அடக்க மாவட்ட ரீதியாக மையவாடி அமைக்க வேண்டும்

0 338

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்­றினால் மர­ணிக்கும் ஜனா­ஸாக்­களை ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்கு அடக்­கத்­துக்­காக எடுத்துச் செல்­வதில் மக்கள் பல சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர்.

வச­தி­யற்ற மக்கள் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். அதனால் மாவட்­டங்கள் தோறும் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு மைய­வாடி ஒதுக்­கப்­ப­ட­வேண்டும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மெள­லானா கோரிக்கை விடுத்­துள்ளார்.

மாவட்ட ரீதியில் மைய­வாடி ஒதுக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் தான் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர்­க­ருத்து தெரி­விக்­கையில் கொவிட் 19 மர­ணங்கள் அடக்­கத்­துக்­காக அனைத்து மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் ஓட்­ட­மா­வ­டிக்கே எடுத்துச் செல்­லப்­ப­டு­கின்­றன.இதனால் மனி­த­வளம், அரசின் நிதி விர­ய­மாக்­கப்­ப­டு­கி­றது. வச­தி­வாய்ப்­பற்­ற­வர்கள் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

அம்­பாறை, திரு­மலை, கண்டி,குரு­ணாகல், மன்னார் போன்ற மாவட்­டங்­களில் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு காணிகள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.சில காணிகள் ஏற்­க­னவே நீர்­வ­ழங்கல் சபை­யினால் அடக்கம் செய்­வ­தற்கு உகந்த இடங்­க­ள­தாக சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளன.

ஓட்­ட­மா­வ­டியில் முஸ்லிம் ஜனா­ஸாக்கள் மாத்­தி­ர­மல்ல சிங்­கள, தமிழ்,கிறிஸ்­தவ மற்றும் வெளி­நாட்­ட­வர்­களின் சட­லங்­களும் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. தூர இடங்­க­ளி­லி­ருந்து சடலங்கள் கொண்டுவரப்படுகின்றன. வீண் விரயங்களையும், அசெளகரியங்களையும் தவிர்ப்பதற்காக மாவட்ட ரீதியில் கொவிட் 19 மையவாடிகள் நிறுவப்பட வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.