ஜனாஸாக்களை அடக்க இடம் வழங்கியபோது இந்தளவு மரண வீதத்தை எதிர்பார்க்கவில்லை

தினம் 10-20 வரை ஜனாஸாக்கள் ; நேற்று வரை 660 ஜனாஸாக்கள் அடக்கம்

0 649

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 வைரஸ் தொற்று ஜனா­ஸாக்கள் அடக்­கத்­துக்­காக எடுத்­து­வ­ரப்­படும் எண்­ணிக்கை நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கின்­றன. தினம் 10க்கும் 20க்கும் இடைப்­பட்ட எண்­ணிக்­கை­யி­லான கொவிட் 19 ஜனா­ஸாக்கள் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் விஷேட மைய­வா­டியில் அடக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன. ஓட்­ட­மா­வடி–மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு நாம் அனு­மதி வழங்­கியபோது இந்­த­ள­வுக்கு மர­ண­வீதம் அதி­க­ரிக்கும் என நாம் எதிர்­பார்க்­க­வே­யில்லை ஓட்­ட­மா­வ­டி­யிலும் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது என ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நௌபர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

கொவிட் 19 ஜனா­ஸாக்கள் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘ஓட்­ட­மா­வடி – மஜ்மா நகர் மைய­வா­டியில் நேற்று வியா­ழக்­கி­ழமை வரை 660 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்­தி­லி­ருந்து மட்டும் 7 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. ஓட்­ட­மா­வ­டியில் கொவிட் 19 தொற்று பர­வி­யுள்ள நிலையில் 3 கிராம சேவை­யாளர் பிரி­வுகள் முழு­மை­யாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மாஞ்­சோலை, மீரா­வோடை கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவை­யாளர் பிரி­வுகள் இவ்­வாறு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இப்­பி­ரி­வு­க­ளி­லி­ருந்து எவரும் வெளி­யே­றவோ, இப்­பி­ர­தே­சங்­க­ளுக்கு எவரும் உட்­பி­ர­வே­சிக்­கவோ முடி­யாத அளவில் சுகா­தார பிரிவு மற்றும் பொலி­ஸா­ரினால் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

ஓட்­ட­மா­வ­டிக்கு வருகை தரும் ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்கள் தங்கி தொழு­வ­தற்கும் அன்­றாட கட­மை­களை பூர்த்தி செய்­வ­தற்கும் மைய­வா­டிக்கு அப்பால் 800 மீற்றர் தூரத்தில் பிர­தான வீதியில் இரு கூடா­ரங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இக்­கூ­டா­ரங்­களை காத்­தான்­குடி நக­ர­சபை தனது செலவில் அமைத்­துள்­ளது. பாது­காப்பு பிரி­வினர் இதற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளனர்.

மைய­வா­டிக்குள் பாது­காப்பு பிரி­வினர் அமர்ந்து தமது கட­மை­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் காத்­தான்­குடி நக­ர­சபை கூடா­ர­மொன்­றினை அமைத்து வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது. மைய­வா­டியைச் சுற்­றியும், உள்­ளேயும் வெளிச்ச வச­திகள் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. மரு­த­மு­னையைச் சேர்ந்த கிரா­ம­சே­வை­யாளர் ஒருவர் தனது செலவில் இந்த ஏற்­பா­டு­களைச் செய்­துள்ளார்.

முஸ்லிம் சமூ­கத்தில் கொவிட் 19 வேக­மாகப் பரவி மரண வீதம் அதி­க­ரித்து வருகின்றமை தொடர்பில் மக்கள் கூடுதல் அவதானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஓட்டமாவடி – மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு நாம் அனுமதி வழங்கிய போது இந்தளவுக்கு மரணவீதம் அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்க வேயில்லை’ என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.