கனடா :  கொல்லப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கு கனத்த மனதுடன் கனேடிய மக்கள் பிரியாவிடை

0 632

எம்.ஐ.அப்துல் நஸார்

வெறுப்­பு­ணர்வு கார­ண­மாக நப­ரொ­ரு­வ­ரினால் பிக்கப் ரக ட்ரக் வாக­னத்­தினால் மோதிக் கொல்­லப்­பட்ட முஸ்லிம் குடும்­பத்தின் ஜனாஸா நல்­ல­டக்கம் கடந்த சனிக்­கி­ழமை மாலை கனே­டிய நக­ர­மான லண்­டனில் நூற்­றுக்­க­ணக்­கான மக்­களின் பங்­கு­பற்­று­த­லுடன் நடை­பெற்­றது.

ஜனாஸாத் தொழு­கை­யி­னை­ய­டுத்து கனே­டிய தேசியக் கொடி போர்த்­தப்­பட்ட பேழைகள் பொது மயா­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டன.

People transport a flag-wrapped coffin, outside the Islamic Centre of Southwest Ontario, during a funeral of the Afzaal family that was killed in what police describe as a hate-motivated attack, in London, Ontario, Canada June 12, 2021. REUTERS/Carlos Osorio

ஒரு குடும்­பத்தின் மூன்று தலை­மு­றைகள் துடைத்­த­ழிக்­கப்­பட்­டமை மிகவும் மன­வே­த­னை­ய­ளிக்­கின்­றது என மர­ணச்­ச­டங்­குகள் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்­ன­தாக லண்டன் நகர முதல்வர் எட் ஹோல்டர் தெரி­வித்தார்.

கனே­டிய தேசியக் கொடி போர்த்­தப்­பட்ட பேழைகள் தென்­மேற்கு ஒன்­டா­ரி­யோ­வி­லுள்ள இஸ்­லா­மிய மத்­திய நிலை­யத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் நடை­பெற்ற ஒரு மணி நேர இரங்கல் கூட்டம் தொழுகை மற்றும் சமயத் தலை­வர்கள் மற்றும் சமூகத் தலை­வர்­களின் அனு­தாப உரை­க­ளுடன் முடி­வுக்கு வந்­தது.

ஒட்­டு­மொத்த கனே­டிய தேசமும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருக்­கி­றது என்ற உண்மை அவர்­க­ளது ஜனாஸா பேழைகள் கன­டாவின் அழ­கிய தேசியக் கொடி­யினால் போர்த்­தப்­பட்­டி­ருப்­பதன் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என கன­டா­விற்­கான பாகிஸ்­தான உயர்ஸ்­தா­னிகர் ரஸா பஷீர் தரார் தெரி­வித்தார்.

ஆறுதல்
மிகவும் கவலை தோய்ந்த ஒரு சமூ­கத்­திற்கு ஒரு ஆறு­தலை வழங்­கு­கின்ற கடி­ன­மா­ன­தொரு முன்­னெ­டுப்­பாக இந்தத் தொழுகை அமையும் என சனிக்­கி­ழமை இறுதிக் கிரி­யை­க­ளுக்கு முன்­ன­தாக, உள்ளூர் இமாம் ஒருவர், தெரி­வித்­தி­ருந்தார்.

நாங்கள் உணர்வு ரீதி­யாக மிகவும் களைப்­ப­டைந்­துள்ளோம் என நினைக்­கின்றேன் என ஆரிஜி அன்வர் தெரி­வித்தார். மிகக் கொடூ­ர­மான தாக்­குதல் நடை­பெற்­றதைத் தொடர்ந்து இடம்­பெற்ற விட­யங்கள் அனைத்­திற்கும் நாம் நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம். சனிக்­கி­ழமை சில விட­யங்கள் முடி­வுக்கு வரும் என எதிர்­பார்க்­கின்றோம்.

20 வய­தான நதா­னியேல் வெல்ட்மென், கறுப்பு நிற பிக்கப் ரக ட்ரக் வண்­டி­யினை ஓட்டிச் சென்று மோதி­யதில் நான்கு முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டனர்.
சல்மான் அப்சால், 46, அவ­ரது மனைவி மதிஹா சல்மான், 44, அவர்­க­ளது 15 வயது மகள் யும்னா அப்சால் மற்றும் சல்மான் அப்­சலின் 74 வய­தான தாய் தலாத் ஆகியோர் கொல்­லப்­பட்­டனர். அதே­வேளை 09 வய­தான பயேஸ் அப்சால், கடு­மை­யான காயங்­க­ளுடன் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். தற்­போது அவர் குண­ம­டைந்து வரு­கின்றார்.

வெறுப்­பு­ணர்வு வெற்றி பெற
அனு­ம­திக்க மாட்டோம்

திட்­ட­மி­டப்­பட்ட வெறுப்­பு­ணர்வுக் குற்றச் செயல் என பொலி­ஸாரால் தெரி­விக்­கப்­படும் படு­கொலை செய்­யப்­பட்ட கனே­டிய முஸ்லிம் குடும்ப உறுப்­பி­னர்­களைக் கௌர­விக்கும் அஞ்­சலி நிகழ்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­ற­போது அதில் பங்­கு­பற்­றிய ஆயி­ரக்­க­ணக்­கான மக்­க­ளோடு பிர­தமர் ஜஸ்டின் ட்ருடோவும் இணைந்து கொண்டார்.

இது ஒரு பாவச் செயல், ஆனால் இங்­குள்ள மக்­களின் கரு­ணையும் அப்சால் குடும்­பத்­தி­னரின் உயிர்­களின் கரு­ணையும் எப்­போதும் இருளை அகற்றும் என அஞ்­சலி நிகழ்வு இடம்­பெற்ற லண்டன் முஸ்லிம் பள்­ளி­வாயல் படிக்­கட்­டுக்­களில் மலர்­களை வைத்த பின்னர் அங்­கி­ருந்து மக்­க­ளுக்கு உரை­யாற்­றி­ய­போது தெரி­வித்­த­தாக டொரொன்டோ ஸ்டார் தெரி­வித்­துள்­ளது.

லண்டன் முஸ்லிம் பள்­ளி­வாயல் வாகனத் தரிப்­பிட வளா­கத்தில் மாலை 7.30 இற்கு முன்­ன­தாக ஆரம்­ப­மான அஞ்­சலி நிகழ்வு முக­நூலில் நேர­டி­யாக அஞ்சல் ஒளி­ப­ரப்புச் செய்­யப்­பட்­டது.

ஜனாஸாத் தொழுகை நடை­பெற்ற லண்டன் முஸ்லிம் பள்­ளி­வா­யலின் நுழை­வாயில் புற்­த­ரையில் புதிய பூக்கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

‘இது எமது நகரம்’ என கூடி­யி­ருந்த மக்கள் மத்­தியில் உரை­யாற்­றிய லண்டன் முஸ்லிம் பள்­ளி­வா­யலின் தலைவர் பிலால் ரஹ்ஹால் தெரி­வித்தார்.

‘உங்கள் தோலின் நிறம், உங்கள் மத நம்­பிக்கை அல்­லது நீங்கள் பிறந்த இடம் கார­ண­மாக ஏனையோர் உங்­களை வேறு­வி­த­மாக சிந்­திக்கத் தூண்­டு­வ­தற்கு அனு­ம­திக்­கா­தீர்கள். இது எமது நகரம், நாங்கள் வேறெங்கும் செல்­ல­மாட்டோம்’ எனவும் அவர் தெரி­வித்தார்.

தேசிய துக்கம்
இந்தத் தாக்­குதல் நாடு முழு­வதும் பெருந் துயரை ஏற்­ப­டுத்­திய நிலையில் பல அர­சி­யல்­வா­திகள், செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் முஸ்லிம் பிர­மு­கர்கள் அஞ்­ச­லியில் பங்­கு­பற்றி கவ­லை­யினைப் பகிர்ந்து கொண்­டனர்.

• நுசைபா அல்-­அஸீம் – லண்டன் முஸ்லிம் பள்­ளி­வா­யலின் இரண்­டா­வது உப தலைவர் :
‘கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அந்த முஸ்லிம் குடும்பம் நடந்த அதே பாதையில் தான் நானும் நடந்தேன். ஆனால் நான் நடந்து முடித்­தி­ருக்­க­வில்லை. நண்­பர்­களும் குடும்­பத்­தி­னரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வரும் சமூக வலைத்­த­ளங்கள் மூலமும் தெரி­வித்துக் கொள்­வது போல, அது ஒரு விட­ய­மல்ல, அது நானா­கவும் இருந்­தி­ருக்க முடியும். அவர்கள் எங்­களைச் சேர்ந்­த­வர்கள்’.

• கலா­நிதி இன்­கிரிட் மட்சன் – வெஸ்டேர்ன் பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய கற்­கைத்­து­றையின் லண்டன் மற்றும் வின்ட்ஸர் சமூகத் தலைவர்.
வெறுப்­பு­ணர்வை விடவும் இறை­வனின் கருணை, அன்பின் பிர­தி­ப­லிப்­பினால் உங்கள் அனை­வ­ரையும் இன்று காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. வெறுப்­பு­ணர்­வினை தாண்டி எம்மால் வர­மு­டியும். இங்­குள்ள உங்கள் மனதில் இன்னும் வெறுப்­பு­ணர்வு இருக்­கு­மானால் உங்­க­ளுக்­காக அதி­க­ம­திகம் வேண்­டு­கின்றோம், உங்கள் மனங்கள் மாற வேண்டும் என வேண்­டு­கின்றோம். இங்­குள்ள அன்­புள்ளம் கொண்ட மக்­களின் அன்­பினை அதி­க­ம­திகம் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு, முழு­மை­யான அன்பை நீங்கள் அறிந்து கொள்ளும் வரை உங்கள் கரங்­களும் உங்கள் இத­யங்­களும் எங்­க­ளுக்கு வேண்டும்.

• நவாஸ் தாஹிர் – இஸ்­லா­மிய வெறுப்­பு­ணர்­வுக்கு எதி­ரான உள்ளூர் பிர­சார அமைப்­பான ஹிக்மா அமைப்பின் தலைவர்.
நாம் தற்­போது வெறுப்­பு­ணர்­வுக்கு எதி­ரான யுத்­தத்தில் ஈடு­பட்டு வரு­கின்றோம். அந்த யுத்­தத்தை எதிர்­கொள்­வ­தற்கு பிரி­வு­க­ளற்ற ஒற்­று­மையே அவ­சி­ய­மாகும். அதற்குத் தேவை ஒத்­து­ழைப்பு, அதற்குத் தேவை ஒருங்­கி­ணைந்த தலை­மைத்­துவம்.

• எரின் ஓடூலே – சமஷ்டி பழ­மை­வாத கட்­சியின் தலைவர்.
ஏனைய அனைத்து கனே­டி­யர்­க­ளையும் போன்று இந்தக் குடும்­பமும் அதே பாது­காப்­பிற்கும், அச்­ச­மின்றி சுதந்­தி­ர­மாக இருப்­ப­தற்கும் சுதந்­தி­ர­மாக வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் உரித்­து­டை­ய­தாகும். அது அனைத்து கனே­டி­யர்­க­ளுக்கும் யதார்த்­த­பூர்­வ­மாக இருப்­பதை உறுதி செய்­வ­தற்கு நாம் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்க வேண்டும்.

• ஜக்மீட் சிங் – சமஷ்டி என்.டி.பி கட்­சியின் தலைவர்.
முஸ்லிம் சமூ­கத்தின் மனதில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்தப் பயங்­க­ர­வாதச் செயல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. எனவே ஹிஜாப் அணிந்­துள்ள என் சகோ­த­ரி­க­ளுக்கும், தொப்பி அணிந்­துள்ள என் சகோ­த­ரர்­க­ளுக்கும் நான் கூறிக்­கொள்ள விரும்­பு­வது என்­ன­வென்றால், அச்­சத்­திற்­குள்­ளா­கா­தீர்கள் என்­ப­துதான். நாம் நாமாக இருப்­பதில் பெரு­மை­ய­டை­வ­தற்­கா­கவே டேர்­ப­னையோ அல்­லது ஹிஜா­பையோ அணி­கின்றோம்.

அன­ட­னாமி கோல் – சமஷ்டி பசுமைக் கட்­சியின் தலைவர்.
எங்­கெல்லாம் வேதனை இருக்­கி­றதோ, அவற்றை எமது செயற்­பா­டு­களால் சீர் செய்வோம். அவற்றை சீர்­செய்யும் எமது செயற்­பாடு என்­பது, அவர்கள் யாராக இருக்­கி­றார்­களோ அந்த நிலை­யி­லேயே தமது அடை­யா­ளங்­க­ளுடன் அச்­சமோ கவ­லையோ இன்றி வீட்­டை­விட்டு வெளியில் செல்­வ­தற்கு பாது­காப்­புள்­ளது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாகும். எங்­கெல்லாம் பிள­வுகள் உள்­ளதோ அங்­கெல்லாம் ஒற்­று­மை­யினை உறு­திப்­ப­டுத்­துவோம்.

இன்­றைய நாள் முடி­வுறும் இத் தரு­ணத்தில் நாம் எம்­மை­விட்டு பிரிந்­துள்ள இவர்­க­ளுக்­காக நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் ‘வெறுப்புணர்வு ஒருபோதும் வெற்றிபெறாது’ என்பதாகும்

கனடா முழு­வ­தி­லு­முள்ள மாகா­ணங்­களில் இஸ்­லா­மிய வெறுப்­பு­ணர்வுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான கவ­லைகள் அதி­க­ரித்து வரு­வ­தோடு இன­வாதம், வெறுப்­பு­ணர்வு வன்­மு­றைகள் மற்றும் தீவிர வல­து­சா­ரி­களின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற பர­வ­லான கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­படும் நிலையில் இத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.

2019ஆம் ஆண்டு முஸ்­லிம்­களை இலக்கு வைத்து 181 இஸ்­லா­மிய வெறுப்­பு­ணர்வுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அதற்கு முந்­தைய ஆண்டில் இடம்­பெற்ற 166 தாக்­கு­தல்­க­ளோடு பார்க்­கையில் ‘மிகச் சிறிய அதி­க­ரிப்பு’ காணப்படுவதாகவும் கனேடிய புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.Vidivelli

Leave A Reply

Your email address will not be published.