பௌத்த சிங்கள சினேக மனோபாவம் இஸ்லாமோபோபியாவாகியது ஏன்?

3 890

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

சென்ற வார தொடர்ச்சி…

ஈரா­னியப் புரட்சி ஷீயா முஸ்லிம்கள் நடாத்­திய புரட்சி. அவர்கள் மொத்த உலக முஸ்லிம் சனத்­தொ­கையில் 15––20 சத­வீ­தத்­தி­னரே. பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் சுன்­னி­க­ளாவர்.

சவூ­தியின் மன்­ன­ராட்சி வ­ஹா­பிய வைதீக இஸ்­லாத்­துடன் செய்­து­கொண்ட ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் அமைந்த ஒன்று. வ­ஹா­பித்­துவம் ஷீயா இஸ்­லாத்தின் பரம எதிரி. அத்­துடன் எண்ணெய் வளத்­திலும் பண­ ப­லத்­திலும் ஈரா­னை­வி­டவும் பன்­ம­டங்கு வலு­வான ஒரு நாடு சவூதி அரே­பியா. எல்­லா­வற்­றுக்கும் மேலாக, முஸ்­லிம்­களின் மிக­முக்­கிய வணக்­கஸ்­த­லங்கள் இரண்டும் அங்­கேதான் அமைந்­துள்­ளன. அந்த நாட்­ட­ர­சனே அவற்றின் பாது­கா­வ­ல­னு­மாவார். என­வேதான் சவூதி அரே­பி­யாவின் வ­ஹா­பித்­து­வத்தைக் கொண்டு ஈரானின் புரட்சி வேட்­கையைத் தணிக்­க­லா­மென அமெ­ரிக்கா முடிவு செய்­தது. அமெ­ரிக்­காவின் இந்த முடிவு வ­ஹா­பித்­து­வத்­துக்குக் கிடைத்த எதிர்­பா­ராத ஒரு பரிசு. அரே­பிய தீப­கற்­பத்தைத் தாண்டி வ­ஹா­பித்­துவம் உலகம் சுற்­றி­யது.

இலங்­கை­யிலே 1980கள் ஜே. ஆர். ஜெய­வர்த்­த­னவின் திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கையும், தாராள அர­சியற் கொள்­கையும் நடை­மு­றைக்கு வந்த காலம். தொழிலும், முதலும், பொருட்­களும், சேவை­களும் தடை­க­ளின்றி நாட்­டுக்குள் வரலாம் போகலாம். தொழில் மிகையும் முதல் வரட்­சி­யு­முள்ள இலங்கை தனது தொழி­லா­ளர்கள் தொழில் தேடி வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­வ­தையும் வெளி­நாட்டு முதல் இலங்­கைக்குள் நுழைந்து முத­லீ­டா­வ­தையும் வர­வேற்­றது. முஸ்லிம் ஆண்­களும் பெண்­களும் அரபு நாடு­க­ளுக்குப் படை­யெ­டுத்­தனர். அரபுப் பணமும் இலங்­கைக்குள் நுழைந்­தது. முத­லீ­டாக மட்­டு­மல்ல நன்­கொ­டை­க­ளா­கவும் அது வர­லா­யிற்று. அத்­துடன் ஜெய­வர்த்­தன அரசு எதிர்­பா­ராத இன்­னொன்றும் இலங்­கைக்குள் நுழைந்­தது. அதுதான் வ­ஹா­பித்­துவ இஸ்­லாமும் அரபுக் கலா­சாரச் சின்­னங்­களும்.

இலங்கை முஸ்­லிம்­களின் மத­வ­ழி­பா­டு­களும் அவர்­களின் நடை உடை பாவ­னையும் பல நூற்­றாண்­டு­ கா­ல­மாக பௌத்த மக்­க­ளுக்குப் பரிச்­ச­ய­மா­ன­தொன்று. அந்த வழி­பா­டு­களும் நடை உடை பாவ­னையும் பெரும்­பாலும் இந்­தியக் கலா­சாரக் கலப்பைக் கொண்­டி­ருந்­த­மையும் அதே கலா­சா­ரத்­துடன் பௌத்­தமும் தொடர்­புபட்டி­ருந்­த­மையும் இலங்­கையில் இஸ்லாம் பர­வு­வ­தற்கு ஏது­வா­கிற்று. ஆனால் 1980களுக்­குப்பின் அரபு நாட்டு உடை­களும் வ­ஹா­பித்­துவ வழி­பாட்டு முறை­களும் ஒரு புதிய தோற்­றத்தை முஸ்­லிம்­க­ளி­டையே அறி­மு­கப்­ப­டுத்­தி­யது மட்­டு­மல்­லாமல் அதனால் முஸ்­லிம்­க­ளுக்­குள்­ளேயே பல சச்­ச­ர­வு­களும் பிரி­வி­னை­களும் தோன்றி சமூக அமை­தியைக் குலைக்­க­லா­யின. அரபுப் பணத்­தினால் புதுப்­புதுப் பள்­ளி­வா­சல்­களும், மத்­ர­சாக்­களும் சொற்ப காலத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு, காத்­தான்­குடி போன்ற சில முஸ்லிம் வதி­வி­டங்கள் அர­பு­ நாட்டுச் சாயலைக் கொண்­ட­தா­கவும் மாறின. இவை எல்­லா­வற்­றை­யும்­விட மிகவும் முக்­கி­ய­மான ஒரு மாற்றம் என்­ன­வெனில், முஸ்­லிம்கள் கலா­சாரத் தனித்­துவம் பாது­காக்­கப்­படல் வேண்டும் என்ற எண்­ணத்தில் மற்ற இனங்­க­ளுடன் அண்டிப் பழ­கு­வதைக் குறைக்­க­லா­யினர். தேவை ஏற்­பட்டால் ஒழிய மற்ற நேரங்­களில் தாமும், தமது தொழிலும், வீடும் என்ற நிலையில் ஒதுங்கத் தொடங்­கினர். முதன் முத­லாக முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனிப்­பட்ட அர­சியல் கட்­சி­யொன்று 1990களில் உரு­வா­னது இம்­மாற்­றங்­களின் உச்­சக்­கட்­ட­மாகும். இந்த மாற்­றங்­க­ளைப்­பற்றி முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­வர்­களும் மத­பீ­டங்­களும் எந்தக் கவ­லை­யு­மின்றி, அவற்றை தமது அர­சியல் அல்­லது தலை­மைத்­துவ இலா­பங்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தி­யமை எந்த அள­வுக்கு அவர்­க­ளுக்கும் சமூ­க­வி­ய­லுக்கும் தொடர்பு இருக்­க­வில்லை என்­பதைக் காட்­டிற்று. ஒரு பல்­லின சமூ­கத்தில் ஒரு குறிப்­பட்ட இனம் சொற்ப காலத்­துக்குள் அதுவும் அந்நிய­நாட்டுத் தாக்­கத்தால் தனி­மையை நாடு­வதை மற்ற இனங்கள் எவ்­வாறு கருதும் என்­ப­தைப்­பற்றி அவர்கள் சிந்­திக்­கவே இல்லை.

இஸ்­லா­மோ­போ­பி­யாவின் வளர்ச்சி
பௌத்த மக்­களின் பார்­வையில் அதுவும் அர­சியல் பௌத்­தத்தின் நோக்கில் அந்த மாற்­றங்­க­ளெல்லாம் பல சந்­தே­கங்­களை உரு­வாக்­கின. முக்­கி­ய­மாக, அரபுப் பணமும் கலா­சா­ரமும், வ­ஹா­பியக் கொள்­கை­களும், தனிப்­பட்ட அர­சியற் கட்­சியும், வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு மாகாண சபையில் முஸ்­லிம்­க­ளுக்­கென ஒரு தனி அலகு வேண்­டு­மென்ற கோரிக்­கையும், அவற்­றிற்­கெல்லாம் மகுடம் வைத்­த­துபோல் முஸ்­லிம்கள் தனித்­து­வத்தை நாடி­ய­மையும், ஈற்றில் அவர்களும் நாட்­டையே பங்­கு­போடத் தூண்­டு­வார்­களோ என்ற ஒரு சந்­தே­கத்தை பௌத்த அர­சி­யல்­வா­தி­களின் மத்­தியில் துளிர்­விடச் செய்­தது. தமிழர்களின் பிரி­வி­னை­வா­தத்தை முறி­ய­டித்த களை ஆறு­வ­தற்கு முன்னர் இன்­னு­மொரு பிரி­வி­னைக்கு முஸ்­லிம்கள் வித்­தி­டு­கி­றார்­களா என்ற சந்­தேகம் பொது பல சேனா போன்ற தீவி­ர­வாத பௌத்த இயக்­கங்­களை ஆட்­கொண்­டது. ஆண்­டாண்டு கால­மாக அந்நி­யோன்­னி­ய­மாக பௌத்த மக்­க­ளுடன் இணைந்­து ­வாழ்ந்த முஸ்­லிம்கள் ஏன் சடு­தி­யாக இப்­ப­டி­யா­னார்கள்? இதற்குப் பின்னால் வெளி­நாட்டுச் சக்­தி­களும் அவற்றின் தூண்­டு­தல்­களும் உண்டா? என்ற கேள்­விகள் எழுந்­தன. அதனால் இஸ்­லா­மோ­போ­பியா என்ற மேற்கின் வியாதி பௌத்த மக்­களில் ஒரு பகு­தி­யி­னரை பீடிக்கத் தொடங்­கி­யது. தூர­நோக்­கற்ற முஸ்லிம் தலைவர்களுக்கு இது புரி­யவே இல்லை.

எவ்­வாறு முஸ்லிம் தலைவர்கள் தமது சமூக மாற்­றங்­களை அர­சியல் லாபத்­துக்­காக வள­ர­விட்­டார்­களோ அதே­போன்று சிங்­கள பௌத்த அர­சி­யல்­வா­தி­களும் அதே லாபத்­துக்­காகப் பொது பல சேனா­ போன்ற தீவி­ர­வாத இயக்­கங்­களின் இஸ்லாமோபோபியா பிரசாரங்களை வளரவிட்டார்கள். முஸ்லிம் தலைவர்களின் தூர சிந்தனையற்ற அரசியல் முஸ்லிம் தீவிரவாதம் வளர்வதற்கு வழிவகுக்க, அந்தத் தலைவர்களின் ஆதரவை நாடிய பௌத்த சிங்கள அரசியல் தலைவர்கள் இஸ்லாமோபோபியா வளர்வதற்கு வழிவகுத்தனர். முஸ்லிம் தீவிரவாதிகளின் 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் இஸ்லாமோபோபியாவுக்குக் கிடைத்த ஓர் அருட்கொடை. இன்று இஸ்லாமோபோபியாவின் ஆதரவால் ஆட்சிபீடமேறிய பௌத்த அரசியல்வாதிகள் புலி வாலைப் பிடித்த கதைபோல அதனை தவிர்க்க முடியாது அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே இஸ்லாமோபோபியாவை வளர்க்கின்றனர். இது இந்த நாட்டின் ஒரு சாபக்கேடு. (தொடரும்) – Vidivelli

 

3 Comments
  1. கலாநிதி அமீர் அலிக்கு நன்றி. கடந்த பத்தாண்டுகளாக நான் சிங்களவரின் இன்றைய இஸ்லாமிய எதிர்ப்பு 1990 களின் முன்னர் போல பொத்தாம் பொதுவான முஸ்லிம்
    எதிர்ப்பல்ல சித்தாந்த ரீதியானது, அமைப்புரீதியாக மாறுபட்டது என கூறிவந்தேன். சிங்களவர் சூபிகளை பாரம்பரிய முஸ்லிம்கள் என்கிறார்கள். சிங்களவர் அரேபிய செல்வாக்கால் உருவான பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என குறிப்பிட்டு தெளிவாகவே வகாபி, சலாபி சிந்தனை பிரிவினரையே தனிமைப் படுத்தி எதிர்க்கிறார்கள். சிங்கள பெள்த்த இனவாதிகளின் ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய விமர்சனங்களும் இந்த போக்கிலேயே அமைகிறது. அதனால்தான் பாரம்பரிய முஸ்லிம்கள் ஏனையோர் என்னும் பதங்களை தவிர்த்துவிட்டு சிங்களவரோடு பிரச்சினையை பேசி தீர்க்க முடியாதென வலியுறுத்தினேன். அதேசமயம் முஸ்லிம்கள் மத்தியில் வஹாபிகள் தனிமைப்படாமல் சூபிகளோடு பேசி ஜனநாயக அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்திவந்தேன். அதற்க்குப் பரிசாக முனாபிக் கபீர் பட்டங்களையே வாங்கிக் கட்டினேன். முஸ்லிம் அறிஞர்களும் தலைவர்களும் உள்வாரி எதிர்புகளுக்கு அஞ்சி வாஹாபிகள் தனிமைப்படும்/தனிமைப் படுத்தப்படும் பூதாகரமான பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை. சிங்களவரின் சமகால இஸ்லாமிய எதிர்ப்பின் அடிப்படையாக பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என குறிப்பிட்டி வஹாபிகளை தனிமைபடுத்தும் கோட்பாட்டை கண்டுகொள்ளவில்லை. இது வரலாற்று தவறாகும். இதனால்தான் பிரச்சினை புரிந்துகொள்ளப்படவில்லை. நீங்கள் அடிபடை பிரச்சினையை தொட்டு எழுதுவது இலங்கை முஸ்லிம் மக்களுக்கும் அமைப்புகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தெளிவை ஏற்படுத்துமென நம்புகிறேன். வாழ்த்துக்கள் நண்பரே

    1. எனது முகவரி விசாரித்த வாசகர்களுக்காக தகவல் : எனது முகநூல் Jaya Palan மினஞ்சல் visjayapalan@gmail.com

      1. http://www.jaffnamuslim.com/2021/05/blog-post_894.html
        இங்கு குறிப்பிட்ட கருத்தை அடியொற்றி எழுதப்பட்ட கட்டுரை

Leave A Reply

Your email address will not be published.