ஆளு­மைகள் நிறைந்த ஊட­க­வி­ய­லாளர் மர்ஹூம் எப்.எம்.பைரூஸ்

0 469

எப்.எம்.பைரூஸ் என்ற பெயர் ஊட­கத்­து­றையில் இல­குவில் மறக்க முடி­யாத ஒரு பெய­ராகும். 1965 முதல் 2019 வரை ஊடக மற்றும் இலக்­கியத் துறையில் பணி­பு­ரிந்த அல்ஹாஜ் எப்.எம். பைரூஸ் இவ்­வு­லகை விட்டுப் பிரிந்து சரி­யாக மூன்று ஆண்­டு­க­ளா­கின்­றன. 1952 பெப்­ர­வரி 21 இல் கொழும்பில் பிறந்த இவர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி கால­மானார்.

முகம்­மது காஸிம் சித்தி பரீதா தம்­ப­தி­ய­ருக்குப் பிறந்த இவர், கொழும்பு அல் – இக்பால் மகா வித்­தி­யா­ல­யத்தில் பயின்­ற­தோடு, பத்­தி­ரிகைத் துறையில் டிப்­ளோமா பட்­டத்தைப் பெற்­ற­வ­ராவார்.

தின­பதி, சிந்­தா­மணி, தின­கரன் பத்­தி­ரி­கை­களில் பணிபுரிந்த இவர், மும்­மொழி ஆற்­றல்­மிக்க ஒரு­வ­ராகத் திகழ்ந்தார்.
வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சின் கீழ் உள்ள பொது வச­திகள் சபையில் ஆளணி உத­வி­யாளர், சிரேஷ்ட முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரிந்த வேளை ஊட­கத்­து­றை­யிலும் ஈடு­பட்டார். ஆரம்­பத்தில் தின­ப­தியில் பணி­பு­ரிந்த இவர், தின­பதி இஸ்­லா­மிய பூங்­காவை நடாத்­தினார். தின­பதி மூடப்­பட்ட பின் தின­க­ரனில் இணைந்த இவர், இறக்கும் வரை தின­க­ரனில் பத்­தி­ரி­கை­யா­ள­ராகப் பணி­பு­ரிந்தார்.

பத்­தி­ரிகைத் துறையில் மிக விரை­வாகச் செய்­தி­களை வழங்கும் ஒரு பத்­தி­ரி­கை­யா­ள­ராக மர்ஹூம் பைரூஸ் பெயர் பெற்­றி­ருந்தார். செய்­தி­களைத் தேடிப் பெறு­வதில் வல்­ல­வ­ராக இவர் திகழ்ந்தார். இதற்­காக முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் இவ­ருக்கு ‘பராண்டி’ என்ற பட்டப் பெயரைச் சூட்டி இருந்தார். செய்­தி­களைத் துரு­வித்­து­ருவி தேடிப் பெறும் திறமை இவ­ருக்கு இருந்­தது. எப்­போதும் செய்­தியை முறை­யாக எழு­து­வதில் இவ­ருக்கு இருந்த திறமை கார­ண­மாக இவ­ரது செய்­தியை செம்­மைப்­ப­டுத்த வேண்­டிய தேவையே இருக்­க­வில்லை. ஒரு பஸ் டிக்­கட்டில் கூட குறிப்­பு­களை எழுதி, செய்­தி­களை அறிக்­கை­யிடும் வல்­லமை மிக்­க­வ­ராக பைரூஸ் திகழ்ந்தார். இவ­ருக்கு இருந்த மும்­மொழி ஆற்­றலும் இதற்குக் கார­ண­மாகும். தின­பதி, சிந்­தா­ம­ணிக்கு மட்­டு­மன்றி, ‘தவச வீகன்ட்’ பத்­தி­ரி­கை­க­ளுக்கும் இவர் பங்­க­ளிப்புச் செய்­துள்ளார். இது தவிர, யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வெளி­யான ஈழ­நாடு பத்­தி­ரி­கையின் கொழும்பு செய்­தி­யா­ள­ரா­கவும் பல வரு­டங்கள் இவர் பணி­பு­ரிந்­துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சவூதி அரே­பிய அர­சுக்கு விடுத்த கோரிக்­கைப்­படி ரியாத் இப்னு சவூத் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஊட­கத்­துறை கற்கை நெறியை மேற்­கொள்­வ­தற்கு அப்­போ­தைய ஊடக அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கா­ரினால் தெரி­வு­செய்­யப்­பட்ட 10 ஊட­க­வி­ய­லா­ளர்­களில் இவரும் ஒரு­வ­ராவார். இதன்­படி ரியாத் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஊட­கத்­துறை டிப்­ளோமா பட்­டத்­தையும் பெற்றார். 3 முறை புனித ஹஜ் கட­மை­யையும் நிறை­வேற்­றி­யுள்ளார்.

மர்ஹூம் பைரூஸ் நாட்­டுக்­காக பங்­க­ளிப்புச் செய்த சிங்­கள – தமிழ் முஸ்லிம் தலை­வர்­களைப் பற்றி நினைவுக் கட்­டு­ரை­களை வெளி­யி­டு­வதில் விஷே­ட­மாக கவனம் செலுத்­தினார். அவ்­வா­றான தலை­வர்கள் மற்றும் சிறப்­புக்­கு­ரி­ய­வர்கள் பற்­றி­அ­வர்­க­ளது நினைவு தினங்­களில் கட்­டு­ரை­களை வெளி­யிட்டு வந்தார்.

மர்ஹூம் பைரூஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்­கத்­த­வ­ராக இருந்­த­தோடு, அதன் செய­லாளர், தேசிய அமைப்­பாளர், உப தலைவர் பத­வி­களை வகித்து ஊட­கத்­து­றையின் வளர்ச்­சிக்குப் பங்­க­ளிப்புச் செய்­துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்­திய ஊடகப் பயிற்சி கருத்­த­ரங்­கு­களில் வள­வா­ள­ராகப் பணி­பு­ரிந்து இளைய தலை­மு­றைக்கு ஊடகக் கல்­வியை போதிப்­பதில் அதிக ஆர்வம் காட்­டினார்.

பத்­தி­ரிகைத் துறைக்கு மேல­தி­க­மாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ‘சுட்டும் சுடர், உலக வலம், தீன் பயிர் வளர்க்கும் மத்­ர­ஸாக்கள்’ உட்­பட பல போட்டி நிகழ்ச்­சி­களை நடாத்தி வானொலித் துறை­யிலும் பங்­க­ளிப்புச் செய்தார்.

சபா­நா­ய­கர்­க­ளான எம்.எச். முஹம்மத், எம்.ஏ. பாக்கீர் மாக்கார் ஆகி­யோ­ருடன் நெருங்கிச் செயற்­பட்ட இவர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ள­னத்தின் வளர்ச்­சிக்கு முக்­கிய பங்­க­ளிப்புச் செய்­துள்ளார். மர்ஹும் பாக்கீர் மாக்கார் நாட்டின் சபா­நா­ய­க­ராக இருக்கும் போது நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்கு விஜயம் செய்த போது அவ­ருடன் இணைந்து பய­ணித்து அது தொடர்­பான செய்­தி­களை ஊட­கங்­களில் அறிக்­கை­யிட்டார். அதே போன்று மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் முஸ்லிம் சமய கலா­சார இராஜாங்க அமைச்­ச­ராக இருக்­கும்­போது அவ­ருடன் நெருங்கிச் செயற்­பட்டார்.

முன்னாள் அமைச்சர் அஸ்­வரின் பணி­களை, எண்­ணக்­க­ருக்­களை எழுத்­து­ரு­வப்­ப­டுத்­தி­ய­வர்­களில் கலை­வாதி கலீ­லுடன் இணைந்து பைரூஸும் செயற்­பட்டார். முஸ்லிம் சமய கலா­சார இராஜாங்க அமைச்சு அக்­கா­லத்தில் வரு­டா­வ­ருடம் நடாத்­திய தேசிய மீலாத் விழாக்­க­ளின்­போது வெளி­யி­டப்­பட்ட வெளி­யீ­டு­களில் இவர்­க­ளது பங்­க­ளிப்பு குறிப்­பி­டத்­தக்­கது.

மர்ஹூம் அஸ்வர் அறி­மு­கப்­ப­டுத்­திய ‘வாழ்­வோரை வாழ்த்­துவோம்’ திட்­டத்­தின்கீழ் 1993இல் இவ­ரது ஊடகப் பணிக்­காக ‘சவுதுல் ஹக்’ (சத்­தி­யத்தின் குரல்) என்ற பட்டம் வழங்கி கௌர­விக்­கப்­பட்டார்.

1965 இல் இலக்­கி­யத்­து­றையில் பிர­வே­சித்த இவர், காயல்­பட்­டி­ணத்­திலும் கீழக்­க­ரை­யிலும் நடை­பெற்ற அனைத்­து­லக இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநா­டு­களில் தின­ப­தியின் பிர­தி­நி­தி­யாகக் கட­மை­யாற்­றினார். கீழக்­கரை மாநாட்டில் முஸ்லிம் பத்­தி­ரி­கை­யாளர் என்ற வகையில் இவர் பொன்­னாடை போர்த்தி கௌர­விக்­கப்­பட்டார்.

இவர் பைரூ­ஸியா என்ற புனைப் பெய­ரிலும் ஆக்­கங்­களை வெளி­யிட்­டுள்ளார். அகில இலங்கை சமா­தான நீதி­வா­னான இவர், மாளி­கா­வத்தை இஸ்­லா­மிய நிலை­யத்தில் ஆலோ­சனைக் குழு உறுப்­பி­ன­ராகப் பணி­பு­ரிந்தார். இலங்கை போக்­கு­வ­ரத்து சபை ஆலோ­சனை குழு உறுப்­பி­ன­ரா­கவும் கலா­சார அமைச்சின் இஸ்­லா­மிய நுண்­கு­ழுவின் அங்­கத்­த­வ­ரா­கவும் பணி­பு­ரிந்­துள்ளார்.

கல்­மு­னையில் புக­ழுக்­கு­ரிய மூத்த தம்பி ஆலிம் குடும்­பத்தில், பேரா­சி­ரியர் எம்.ஏ. நுஃமானின் மனை­வியின் சகோ­த­ரி­யான ஆயி­ஷாவை திரு­மணம் முடித்தார். இவர்­க­ளுக்கு பாத்­திமா பர்ஹா, முஹம்­மது பைஸால் என்ற இரு பிள்­ளைகள் இருக்கிறார்கள்.

ஆளுமைகள் நிறைந்த அமைதியான போக்குமிக்க பைரூஸ் நேர்மைக்கு அடையாளமாகத் திகழ்ந்தார். பத்திரிகைத் துறைக்கு மேலதிகமாக விளம்பர முகவர் நிறுவனம் ஒன்றையும் நடத்தினார். விளம்பரத்தைக் கொடுக்கும் எவருக்கும் அதற்குரிய கொமிஷனை சரியாக சதம் கணக்கில் பகிந்தளிப்பது பைரூஸிடம் காணப்பட்ட சிறப்பம்சமாகும்.

67 வருடங்கள் வாழ்ந்து மறைந்த பைரூஸ் ஹாஜி, நேர்மைக்கு, கடின உழைப்புக்கு முன்மாதிரிமிக்கவராக இருந்ததோடு, பழகுபவர்களுக்கு இனிமையானவராகவும் இருந்தார்.

இப்புனித ரமழானில் அவரது மறுமைக்காக பிரார்த்திப்போம்.

என்.எம்.அமீன்

  • -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.