முஸ்லிம்களுடன் இணைந்து நோன்பு நோற்க போகிறேன்

வெலி­கம நகர பிதா ரெஹான்

0 380

தான் ஒரு பௌத்­த­னாக உள்ள போதிலும், இம்­முறை முதன் முறை­யாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக வெலி­கம நகர சபைத் தலைவர் ரெஹான் ஜய­விக்­ரம தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்­டரில் “நான் ஒரு பௌத்தன், நான் எனது வாழ்வில் பௌத்த தத்­து­வத்தை கடைப்­பி­டிக்க முழு­மை­யாக முயற்சி செய்­கிறேன். இதே­வேளை இம்­முறை நான் புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் சகோ­தர சகோ­த­ரி­க­ளுடன் இணைந்து நோன்பு நோற்க மிகுந்த ஆர்­வத்­துடன் காத்­தி­ருக்­கிறேன். நான் நோன்பு நோற்கப் போவது இதுவே முதன்­முறை’’ எனத் தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் உறுப்­பி­னரும் வெலி­கம நகர சபைத் தலை­வ­ரு­மான ரெஹான் ஜய­விக்­ர­மவின் இந்த அறி­விப்­பினை பலரும் வர­வேற்­றுள்­ளனர்.
ரெஹானின் இந்த அறி­விப்­பினை “முத்து தீவின் அமை­தி­யான மற்றும் சகிப்­புத்­தன்­மையை உணர்த்தும் நேர்த்­தி­யான முறை. உங்­க­ளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்­கட்டும்” என இலங்­கைக்­கான துருக்கி தூதுவர் தெமட் செகர்­சி­யோக்லு வர­வேற்­றுள்ளார்.

ரெஹானின் டுவிட்டர் பதி­வினை வர­வேற்று வாழ்த்துத் தெரி­வித்­துள்ள ஏரா­ள­மான முஸ்­லிம்கள், அவ­ருக்கு நோன்பு நோற்­ப­தற்­கான ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யுள்­ளனர்.

“இது உங்கள் சிங்­கள புது­வ­ருட பெருநாள் கால­மல்­லவா? எப்­படி நோன்பு நோற்கப் போகி­றீர்கள்” என ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு, “பெருநாள் சடங்­குகள் முடிந்த பிறகு நான் நோன்பு நோற்பேன்’’ என அவர் பதி­ல­ளித்­துள்ளார்.

இதே­வேளை, தானும் நோன்பு நோற்­பது குறித்து சிந்­தித்து வரு­வ­தாக மதுஷான் பெரேரா என்­பவர் தெரி­வித்­துள்ளார். எனினும் தான் இன்னும் உறு­தி­யாக தீர்­மா­னிக்­க­வில்லை என்றும் தண்ணீர் கூட குடிக்­காமல் இருப்­ப­துதான் கஷ்­ட­மா­னது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இதற்கு பதி­ல­ளித்­துள்ள ரெஹான் ஜய­விக்­ரம, “தண்ணீர் குடிக்­கலாம் என்று நினைக்­கிறேன். எனினும் இது­பற்றி கேட்டு உறு­திப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். இதுவே நமக்கு முதல் தடவை என்­பதால் முயற்­சித்துப் பார்ப்­போமே’’ எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இதற்கு “தண்ணீர் கூட குடிக்க முடி­யாது. நீங்கள் தண்ணீர் குடித்தால் அது உங்­க­ளுக்கு கஷ்­ட­மாக அமையும். குடிக்­கா­விட்­டால்தான் இல­கு­வாக இருக்கும். ஒரு நாளைக்கு தண்­ணீரும் குடிக்­காது முயற்­சித்துப் பாருங்கள். வாழ்த்­துக்கள்” என ஒருவர் பதி­ல­ளித்­துள்ளார்.

வெலி­கம நகர சபைத் தலை­வ­ராக பணி­யாற்றி வரும் இளம் அர­சி­யல்­வா­தி­யான ரெஹான், முஸ்லிம் மக்­க­ளுடன் நெருக்­க­மான உற­வினைப் பேணி வரு­வ­துடன் சம­கா­லத்தில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக குரல் கொடுத்து வரு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.