70:30 என்ற கலப்பு அடிப்படையில் மாகாண தேர்தலை நடத்த முஸ்தீபு

0 547

(றிப்தி அலி)
புதிய தேர்தல் சட்­டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்­றது. இந்த மாகாண சபை தேர்தல் எதிர்­வரும் ஜூன் மாத நடுப் பகு­தியில் நடத்­தப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­படும் நிலையில், இது தொடர்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (23) இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ள­துடன் அடுத்த அமைச்­ச­ரவையில் விரி­வாக கலந்­து­ரை­யா­ட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 70:30 என்ற கலப்பு அடிப்­ப­டையில் மாகாண சபை தேர்­தலை நடத்­து­வது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று அர­சாங்க மட்­டத்தில் தற்­போது இடம்­பெற்று வரு­வ­தா­கவும் ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரி­வித்தார்.

இதற்­க­மைய 70 சத­வீதம் தொகுதி அடிப்­ப­டை­யிலும் 30 சத­வீதம் விகி­தாசா­ரத்தின் அடிப்­ப­டை­யிலும் இடம்­பெறும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பி­லான முன்­மொ­ழி­வொன்­றினை வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு 2014ஆம் ஆண்டு காலப் பகு­தியில் தயா­ரித்­துள்­ளது.
இதே­வேளை, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து பேச்சு வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

இதன்­போது, விரைவில் நடை­பெ­ற­வுள்ள மாகாண சபை தேர்­த­லுக்கு தயா­ராகுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ மற்றும் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகியோர் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள தேர்தல் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களை கடந்த பெப்­ர­வ­ரியில் சந்­தித்து மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு அறி­வுறுத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

எனினும் மாகாண சபை தேர்­தலை உட­ன­டி­யாக நடத்தி 13ஆவது திருத்தச் சட்­டத்­தினை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு இந்­தியா இலங்­கை­யிடம் தொடச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­தது. இந்நிலையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (23) ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வை­யிலும் இந்­தியா இதனை மீண்டும் வலி­யு­றுத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை, தற்­போ­துள்­ள மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்­டத்தில் மாற்­றங்­களை மேற்­கொள்­வதன் மூலமே இந்த தேர்­தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார். எவ்­வா­றா­யினும், மாகாண சபை தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்­கான தயார் நிலையில் தேர்தல் ஆணைக்குழு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கலப்பு அடிப்படையில் மாகாண சபை தேர்தல் இடபெறுமாயின் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெறப்பட்டு வந்த அதிக முஸ்லிம் உறுப்பினர்களையும் இழக்க நேரிடுவதுடன் மாகாணத்தின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியும் இழக்கப்படும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.