181 ஜனாசாக்களே எரிக்கப்பட்டுள்ளன

புரளிகளை கிளப்பாதீர்: நஸீர் அகமட்

0 463

முஸ்­லிம்­களின் ஜனா­சாக்கள் எரிக்­கப்­பட்ட விட­யத்தில் புர­ளிகள் கிளப்­பப்­ப­டு­கின்­றன. 334 பேரின் ஜனா­சாக்கள் எரிக்­கப்­பட்­ட­தாக கூறு­வதில் உண்­மை­யில்லை. இது­வரை 181 ஜனா­சாக்­களே எரிக்­கப்­பட்­டுள்­ளன என மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

கடந்த ஒரு வருட கால­மாக முஸ்­லிம்­களின் ஜனா­சாக்கள் எரிக்­கப்­பட்ட விட­யத்­திற்கு கடந்த 05ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக அனு­மதி வழங்­கிய ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் இந்த விட­யத்தில் உதவி புரிந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­பக்ஸ, அமைச்­சர்­க­ளான தினேஸ் குண­வர்த்­தன, வாசு­தேவ நாண­யக்­கார உட்­பட பல­ருக்கு நன்றி தெரி­விக்­கிறேன்.

கடந்த ஒக்­டோபர் 22 ஆம் திகதி நாங்கள் இந்த அர­சுக்கு ஆத­ரவு அளித்­ததன் கார­ண­மாக எமது நற்­பெ­யரை களங்­கப்­ப­டுத்­திய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்த சபையில் இருக்­கின்­றார்கள். எங்­களை மிகவும் கேவ­ல­மாக சித்­த­ரித்­தார்கள். நாம் ஆத­ர­வ­ளித்­த­த­னா­லேயே ஜனா­சாக்கள் எரிக்­கப்­ப­டு­வ­தா­கவும் பழி சுமத்­தி­னார்கள். பல்­வேறு பொய்­யான பிரச்­சா­ரங்­களை கட்­ட­விழ்த்து விட்­டார்கள்.

கடந்த 5 நாட்­க­ளுக்கு முன்னர் கூட ஜனாஸா எரிப்பு விட­யத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் எரிக்­கப்­பட்ட ஜனா­சாக்கள் தொடர்பில் ஒரு பிழை­யான தக­வலை கூறினார். இது­வரை கொரோ­னாவால் மர­ணித்து எரிக்­கப்­பட்ட 497 பேரில் 334 பேரின் ஜனா­சாக்கள் முஸ்­லிம்­க­ளு­டை­யது என்றார். நிச்­ச­ய­மாக அவ்­வா­றில்லை; எரிக்­கப்­பட்ட உடல்களில் 181 ஜனாசாக்களே முஸ்லிம்களுடையது. இது ஒரு கவலையான விடயம். இவ்வாறு நடந்திருக்க கூடாது. இவ்வாறான விடயங்கள் இனிமேலும் நடக்கக் கூடாதென நாம் பிரார்த்திக்கின்றோம் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.