மாவனெல்லையில் நடந்தது என்ன?

வெடிபொருட்கள் திருடப்பட்டமை, புத்தர் சிலை கண்ணாடிகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களின் உண்மை பின்னணி

0 840

எம்.எப்.எம்.பஸீர்

மாவ­னெல்லை. சர்ச்­சை­க­ளுக்கும், சந்­தே­கங்­க­ளுக்கும் இன்று பெயர்­போன இட­மாக பலரால் கார­ண­மின்­றியே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டது. குறிப்­பாக 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுக்கு முன்­னைய புத்தர் சிலை உடைப்­புகள், தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய பிர­தான அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தள­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டமை போன்­றன இன்று மாவ­னெல்­லையை வேறு கண்­கொண்டு பார்க்கும் நிலையை பல­ரிடம் உரு­வாக்­கி­விட்­டுள்­ளது. எனினும் உண்மை அவ்­வா­றல்ல.

இந்த பின்­ன­ணி­யி­லேயே, கடந்த டிசம்பர் மாதம் மீளவும் மாவ­னெல்லை பேசு­பொ­ரு­ளாக வந்­தது.மாவ­னெல்லை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள கற்­பா­றை­களை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெரு­ம­ளவு வெடி­பொ­ருட்கள் காணாமல் போனமை தொடர்­பி­லான சம்­பவம் நாடு முழுதும் அவ­தா­னத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

அந்த சம்­ப­வத்தை தொடர்ந்து, அதன் உண்மை வெளிப்­பட முன்­னரே, மாவ­னெல்லை பகு­தியில் இரு வேறு பிர­தே­சங்­களில் புத்தர் சிலை­களின் கண்­ணாடி மறைப்­புகள் சேத­மாக்­கப்­பட்ட விட­யங்கள் பதி­வா­கின. இது இன்னும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்த சம்­பவம் பதி­வா­னதும், பெரும்­பா­லா­ன­வர்கள், இவ்­விரு சம்­ப­வங்­க­ளையும் முடிச்சுப் போட்டே பார்க்­க­லா­யினர். ஏனெனில், இதற்கு முன்­ன­ரான அனு­ப­வங்­களும் சிங்­கள ஊட­கங்­களின் பிர­சா­ரமும் அவர்­களை அப்­படி பார்க்கச் செய்­தது எனலாம்.

இதனால் பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கும், சிங்­க­ள­வர்­க­ளுக்கும் இடை­யி­லான உறவில் விரி­சல்கள் ஏற்­ப­டலாம் என்ற அச்ச நிலை அதி­க­ரித்­தது. எனினும் ஈற்றில், இவ்­விரு சம்­ப­வங்­களும் ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­ப­டாத சம்­ப­வங்கள் எனவும் அடிப்­ப­டை­வாதம், பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பில்­லாத சம்­ப­வங்கள் எனவும் பொலிஸார் 10 நாட்­க­ளுக்­குள்­ளேயே சான்­றுகள், சந்­தேக நபர்­களின் விப­ரங்­க­ளுடன் நாட்­டுக்கு அறி­வித்­தனர்.

வெடி பொருள் திருட்டு சம்­பவம்:

கடந்த 2019 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி இரவு, மாவ­னெல்லை – ஹிங்­குல, மொல்­லி­ய­கொட பகு­தியில் இயங்கும் கல்­லு­டைக்கும் குவாரி ஒன்­றி­லி­ருந்து வெடிக்க வைக்க பயன்­ப­டுத்­தப்­படும் ஒரு தொகை உப­க­ர­ணங்கள் காணாமல் போயி­ருந்­தன. குறித்த கல் குவா­ரியின் உரி­மை­யாளர் மறு நாள், டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மாவ­னெல்லை பொலிஸில் முறை­யிட்­டி­ருந்தார். இதற்­க­மைய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு 24 மணி நேரத்தில், மாவ­னெல்லை பொலிஸார், குறித்த கல்­கு­வா­ரியில் சேவை­யாற்றும் ஊழியர் ஒரு­வரை இது தொடர்பில் சந்­தே­கத்தில் கைது செய்­தனர். பேரா­தெ­னிய பகு­தியைச் சேர்ந்த அவரை, மாவ­னெல்லை பொலிசார் விசா­ரணை செய்யும் போது, இந்த சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவால், சி.ஐ.டி.க்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

குறித்த கல் குவா­ரி­யி­லி­ருந்து, அமோ­னியா நைட்ரேட் 15 கிலோ, வேட்டர் ஜெல் 6 ( 750 கிராம்), வெடிக்க வைக்க பயன்­ப­டுத்­தப்­படும் நூல் ( டெட்­ட­னேடர் தண்டு) 35 மீட்டர் , டெட்­ட­னேடர் 20, கல்­லு­டைக்கும் பீம் 5 ஆகி­ய­வையே காணாமல் போயி­ருந்­தன.

கடந்த 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களின் போது குண்டு தயா­ரிக்க, இத்­த­கைய வெடி பொருட்­களின் சேர்க்­கையே பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததால், இந்த விடயம் தொடர்பில் பர­வ­லாக பலரும் பேச ஆரம்­பித்­ததன் பின்­ன­ணியில் விசா­ர­ணைகள் சி.ஐ.டி.யிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து சி.ஐ,.டி.யின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரண­சிங்க, பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த சொய்ஸா ஆகியோர் இந்த விசா­ர­ணை­க­ளுக்கு யாரை நிய­மிப்­பது என பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ரவை அடுத்து ஆலோ­சிக்­க­லா­யினர்.

இந் நிலையில், ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், கடந்த 2018 டிசம்பர் மாதம் மாவ­னெல்­லையில் பதி­வான புத்தர் சிலை தகர்ப்பு, அதனை தொடர்ந்து அவ்­வி­சா­ர­ணை­களின் பல­னாக வனாத்­து­வில்­லுவில் வெடி­பொ­ருட்­களை கைப்­பற்­றிய பின்­ன­ணியில் சஹ்ரான் செயற்­ப­டு­வதை கண்­ட­றிந்த வெற்­றி­க­ர­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்­க­விடம் அவ்­வி­சா­ர­ணை­களை கைய­ளிக்க சி.ஐ.டி.யின் உயர் அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­தனர்.

அதன் பிர­கா­ரமே பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க தலை­மை­யி­லான 5 சி.ஐ.டி. குழுக்கள் மாவ­னெல்­லைக்கு உட­ன­டி­யாக அனுப்­பப்­பட்­டன. அங்கு சென்ற குறித்த சி.ஐ.டி. குழு , முதலில் மாவ­னெல்லை பொலிஸார் கைது செய்­தி­ருந்த கல் குவாரி ஊழி­ய­ரையும் தமது பொறுப்பில் எடுத்­த­துடன் மேல­திக விசா­ர­ணை­களை, பல்­வேறு சாட்­சி­யங்­களை மைய­பப்­டுத்தி பல கோணங்­களில் முன்­னெ­டுக்­க­லா­யினர்.

புத்தர் சிலை­களின் கண்­ணாடி மறைப்­புக்கள் சேத­மாக்­கப்­பட்ட சம்­பவம்:

இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் போதே, அதே மாவ­னெல்லை ஹிங்­குல பகு­தியில் கொழும்பு கண்டி வீதியில் அமைந்­துள்ள புத்தர் சிலை­யொன்றின் பாது­காப்­புக்­காக போடப்­பட்ட கண்­ணாடி கடந்த 29 ஆம் திகதி அதி­காலை அடை­யாளம் தெரி­யாத நபர்­களால் சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் அச்­சம்­ப­வத்­துக்கு ஒரு சில நாட்­க­ளுக்கு முன்னர் அலுத்­நு­வர பகு­தியில் உள்ள புத்தர் சிலை­யொன்றின் பாது­காப்­புக்­காக போடப்­பட்ட கண்­ணா­டியும் அடை­யாளம் தெரி­யாத நபர்­களால் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தே­ச­வா­சிகள் பொலி­ஸா­ருக்கு அதனை தொடர்ந்து அறி­வித்­தி­ருந்­தனர்.

இந்த சிலை சேதப்­ப­டுத்தல் விட­யங்கள் தொடர்பில் சப்­ர­க­முவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரி­யவின் உத்­த­ர­வுக்கு அமைய, அவரின் நேரடி கட்­டுப்­பாட்டில் கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோ­ச­னையில் மாவ­னெல்லை பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரியின் கீழான குழுவும், கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரி­வி­னரும் தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இரு சம்­ப­வங்­க­ளுக்கும் தொடர்பா?

இந் நிலையில் வெடி பொருள் காணாமல் போனமை, தொடர்ந்து வந்த நாட்­களில் புத்தர் சிலை­களின் கண்­ணாடி மறைப்­புக்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டமை உண்­மையில் பல­ருக்கு கடந்த 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுக்கு முன்­ன­ரான சம்­ப­வங்­களை ஞாப­கப்­ப­டுத்­தி­யது. இதனால் இவ்­விரு சம்­ப­வங்­களும் ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­பட்­டதா? யாரால் எப்­படி செய்­யப்­பட்­டன என்­பதை வெளிப்­ப­டுத்த தீவிர அறி­வி­யல்சார் தட­யங்­களை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணைகள் தொடர்ந்­தன.

வெளிப்­பட்ட உண்மை:

குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், இவ்­விரு சம்­ப­வங்­களும் ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­பட்­டது அல்ல என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் கிடைத்­துள்­ள­துடன், வெடி­பொருள் காணாமல் போனமை ஒரு திருட்டு சம்­பவம் என வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கல் குவாரி ஊழியர் ஒருவர் அந்த வெடி­பொ­ருட்­களை திருடி மற்­றொரு கல் குவா­ரி­யுடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு விற்­பனை செய்­துள்­ளமை அவ்­வி­சா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. 2021 வருடம் ஆரம்­பிக்கும் போது அத்­தனை தக­வல்­க­ளையும் வெளிப்­ப­டுத்­திக்­கொண்ட மார­சிங்க தலை­மை­யி­லான சி.ஐ.டி. குழு, சரி­யாக முதலாம் திகதி இந்த திருட்­டுடன் தொடர்­பு­டைய அனைத்து சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்து, இது அடிப்­ப­டை­வாத, பயங்­க­ர­வாத செயற்­பாடு இல்லை என்­ப­தையும் ஒரு திருட்டு சம்­பவம் மட்­டுமே என்­ப­தையும் நிரூ­பித்­தது.

திரு­டப்­பட்ட வெடி பொருட்கள் அனைத்தும் பேரா­தெ­னிய பகுதி வீடொன்றில் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவையும் மீட்­கப்­பட்­டன. இந்த திருட்­டுடன் பேரா­தெ­னிய பகு­தியைச் சேர்ந்த மூவர் (மாவ­னெல்லை பொலிஸார் கைது செய்து சி.ஐ.டி.யில் ஒப்­ப­டைத்­த­வ­ருடன் சேர்த்து), பிலி­ம­த­லாவை பகு­தியைச் சேர்ந்த ஒருவர் இவ்­வாரு கைது செய்­யப்­பட்­டனர். 49 வய­தான துஷான் பின்­ன­கொல்ல, 36 வய­தான சுகத் வீர­சிங்க, 21 வய­தான சுகத் கிம்­ஹான ஆகியோர் சி.ஐ.டி.யினரால் இந்த திருட்டு தொடர்பில் கைது செய்­யப்­பட்­ட­துடன், சரத் பண்­டார என்­பவர் மாவ­னெல்லை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்த நால்­வரும் மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு எதி­ராக திருட்டு தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையின் கீழும், வெடி­பொ­ருட்கள் கட்­டளைச் சட்­டத்தின் கீழும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிர­தானி பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

புத்தர் சிலை கண்­ணாடி மறைப்­புக்­களை சேதப்­ப­டுத்­தி­யது யார்?

மாவ­னெல்லை பகு­தியின் இரு வேறு இடங்­களில் புத்தர் சிலை­களை சுற்றி அமைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணா­டிகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் சேத­மாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டதன் ஊடாக குறித்த சம்­ப­வங்கள் தொடர்­பிலும் கடந்த 4 ஆம் திகதி மர்மம் துலக்­கப்­பட்­டது. கேகாலை – மினு­வன்­க­முவ பகு­தியில் வைத்து இந்த கண்­ணாடி மறைப்­புக்கள் சேத­மாக்­கப்­பட்ட விடயம் தொடர்பில் சந்­தேக நபர் கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

30 வய­து­டைய கேகாலை பகு­தியைச் சேர்ந்த பிரி­யந்த சம்பத் குமார என்ற நபரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில், குறித்த சம்­ப­வங்கள் அடிப்­ப­டை­வாத அல்­லது பயங்­க­ர­வாத பின்­ன­ணியோ தொடர்­பு­களோ அற்­றது என உறு­தி­யா­கி­யுள்­ள­தாக இது தொடர்பில் கருத்து தெரி­வித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யா­னவர் என தெரி­ய­வந்­துள்­ளது. அது தொடர்­பி­லான தேவை­க­ளுக்கு பணம் தேடும் முயற்­சியில் ஹிங்­குல புத்தர் சிலை அருகே காணப்­பட்ட 60 ரூபா பணத்தை திருடும் போது, அப்­புத்தர் சிலையின் கண்­ணாடி மறைப்­புக்கு சேதம் ஏற்­பட்­ட­தாக சந்­தேக நபர் பொலிஸ் விசா­ர­ணை­களில் கூறி­யுள்ளார்.

சிலை சேதப்­ப­டுத்தல் விட­யங்கள் தொடர்பில் சப்­ர­க­முவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரி­யவின் உத்­த­ர­வுக்கு அமைய, அவரின் நேரடி கட்­டுப்­பாட்டில் கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோ­ச­னையில் மாவ­னெல்லை பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரியின் கீழான குழுவும், கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரி­வி­னரும் தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

சம்­ப­வங்கள் பதி­வான இடங்­க­ளுக்கு அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்கள் அழைக்­கப்­பட்டு, அவை பகுப்­பாய்வு செய்­யப்­பட்­டன. 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுக்கு முன்­னரும் இவ்­வா­றான புத்தர் சிலைகள் மீதான கல் வீச்சு தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றி­ருந்­த­மையும், மாவ­னெல்லை, ஹிங்­குல பகு­தியில் கொழும்பு கண்டி வீதியில் அமைந்­துள்ள புத்தர் சிலை அப்­போதும் அடிப்­ப­டை­வா­தி­களின் இலக்­காக இருந்­தி­ருந்­த­மையும், இந்த கல்­வீச்சு தாக்­கு­தல்கள் குறித்து சிங்­கள, முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே பல்­வேறு அச்­சங்­களை தோற்­று­வித்­தன.

இந் நிலையில் குறித்த சம்­பவம் தொடர்­பிலும் தீவிர விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­துடன், பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. உள்­ளிட்ட அறி­வியல் தட­யங்கள் தனிப் பொலிஸ் படை கொண்டு ஆரா­யப்­பட்­டன.

இந் நிலை­யி­லேயே, அறி­வியல் தட­யங்­களை வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமைய கடந்த 4 ஆம் திகதி இரவு சந்­தேக நபர், கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில், அளுத் நுவர பகு­தியில் புத்தர் சிலை­யுடன் இருந்த உண்­டி­யலை உடைத்து திரு­டி­யமை, ஹிங்­குல புத்தர் சிலையின் கண்­ணாடி மறைப்­புக்கு சேதம் விளை­வித்­தமை, அதே தினம், ஹிங்­குல தேவா­லயம் ஒன்றின் உண்­டி­யலை உடைத்து திரு­டி­யமை போன்ற குற்­றங்­களின் மர்­மமும் துலக்கப்பட்டுள்ளது.

பேராதனை வைத்தியசாலைக்கு தான் சிகிச்சை பெற சென்று அங்கு அதிக நேரம் காத்திருந்து ஹிங்குல பகுதிக்கு வருகை தந்ததாகவும், அப்போது நேரம் இரவு 11.50 அளவில் இருக்கும் எனவும் சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளில் கூறியுள்ளார். அப்போது அப்பகுதியில் எவரும் இருக்கவில்லை என தெரிவித்துள்ள சந்தேக நபர், புத்தர் சிலையுடன் காணப்பட்ட பணத்தை திருட முற்பட்ட போது அதன் கண்ணாடி மறைப்புக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அங்கிருந்த 60 ரூபா பணத்தை தான் திருடிச் சென்றதாகவும் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய, அவர் அங்கு வந்த பஸ் வண்டி, பின்னர் எங்கு எவ்வாறு சென்றார் உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தவும் மேலதிக விடயங்களை ஆராயவும் விஷேட விசாரணைகள் தொடர்கின்றன. சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.