முகவர்களுக்கு கடவுச் சீட்டையோ முற்பணமோ வழங்க வேண்டாம்

ஹஜ் யாத்திரிகர்களுக்கு பணிப்பாளர் அறிவுறுத்து

0 1,017

2020 ஹஜ் கட­மையை நிறை­வேற்­ற­வுள்ள ஹஜ் யாத்­தி­ரிகர் எவரும் ஹஜ் முக­வர்­க­ளுக்கு கட­வுச்­சீட்டை வழங்­கவோ முற்­பணம் செலுத்­தவோ வேண்டாம். அவ்­வாறு செலுத்­தி­யி­ருந்தால் உட­ன­டி­யாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­கும்­படி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

ஹஜ் கட்­ட­ணத்தை திணைக்­களம் சிபா­ரிசு செய்யும் அரச வங்­கி­யொன்றில் கணக்­கொன்­றினைத் திறந்து அந்த வங்கிக் கணக்­கிலே வைப்­பி­லிட வேண்டும் வங்­கியின் பெயர் விபரம் ஓரிரு நாட்­களில் திணைக்­க­ளத்­தினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டு­மென்றும் அவர் கூறினார்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் 2020 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்கு மேலும் தெளி­வு­ப­டுத்­து­கையில் தெரி­வித்­த­தா­வது;

ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எந்த ஹஜ் முகவர் நிலை­யத்­தையும் தொடர்பு கொள்ளத் தேவை­யில்லை. ஒரு வாரத்­தினுள் 2020 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் முகவர் நிலை­யங்­களின் பட்­டியல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும். அது­வரை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் காத்­தி­ருக்­கும்­படி வேண்­டப்­ப­டு­கி­றார்கள்.

அத்­தோடு சில ஹஜ் முக­வர்­களின் அனு­ம­திப்­பத்­திரம் ரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது. சில ஹஜ் முகவர் நிலை­யங்கள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. சில தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளன. சில முகவர் நிலை­யங்கள் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இவ்­வா­றான ஹஜ் முகவர் நிலை­யங்­களை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும். இவ்­வா­றான முகவர் நிலை­யங்­களின் பட்­டி­யலும் ஒரு­வார காலத்­துக்குள் வெளி­யி­டப்­படும்.

இவ்­வ­ருடம் ஹஜ் 3 பொதி­களின் கீழ் (Packages) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 5 இலட்­சத்து 75 ஆயிரம், ரூபா 6 ½ இலட்சம் ரூபா, 7 ½ இலட்சம் ரூபா என மூன்று பொதிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் முக­வர்­களைத் தெரி­வு­செய்து கொள்­ளும்­போது முகவர் நிலை­யத்தினூடா­க தாம் எந்­தப்­பொ­தியில் செல்­வது என்­பதை கடிதம் மூலம் உறுதி செய்­து­கொள்­ளலாம்.

திணைக்­களம் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள முகவர் நிலை­யங்­கிளின் பட்­டி­யலை வெளி­யிட்­டதும் தான் விரும்பும் முகவர் நிலை­யத்தை தொடர்பு கொள்­ளலாம்.

அது­வரை அவர்­க­ளிடம் கட­வுச்­சீட்­டினைக் கொடுக்­க­வேண்­டாம்.
ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எந்தக் காரணம் கொண்டும் முகவர் நிலை­யங்­க­ளுக்கு முற்­பணம் செலுத்­தக்­கூ­டாது.

25 ஆயிரம் ரூபா செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் திணைக்­களம் விரைவில் அங்­கீ­க­ரிக்­க­வுள்ள வங்­கி­யொன்றில் புதி­தாக ஹஜ் வங்கிக் கணக்­கொன்­றினை ஆரம்­பித்து அக்­க­ணக்­கிலே ஹஜ் கட்­ட­ணத்தை வைப்­பி­லிட வேண்டும். திணைக்­க­ளத்தின் மேற்­பார்­வையின் கீழ் இக்­க­ணக்கு செயற்­படும். முக­வர்­க­ளுக்கு இந்த வங்கிக் கணக்கின் ஊடா­கவே பணம் செலுத்­தப்­படும். திணைக்­க­ளத்­துக்கு ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அறி­வித்­தாலே பணம் முக­வர்­க­ளுக்கு மாற்­றப்­படும்.

அத்­தோடு இவ்­வ­ருடம் 50 கோட்டாவுக்குக் குறைவாக முகவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. 50 கோட்டாவுக்கு மேலதிகமாக கடந்த வருடங்களில் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொண்ட முகவர் நிலையங்களின் விபரங்கள் யாத்திரிகர்களின் நன்மைக்காக விளம்பரம் செய்யப்படும்.

எனவே, ஹஜ் யாத்திரிகர்கள் இன்னும ஓரிரு தினங்கள் பொறுமைகாக்கும்படி வேண்டப்படுகின்றார்கள் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.