இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தவறாக சித்தரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் குறிப்பிடப்படும் விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதுடன் தவறாக வழிநடாத்தும் வகையிலும் அமைந்துள்ளன.
Read More...
புர்கா தடை : அரசு பின்வாங்கியது தற்காலிகமாகவா?
‘‘இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதைத் தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் நேற்று நான் கையெழுத்திட்டுள்ளேன். விரைவில் அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும்’’ என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடந்த சனிக்கிழமை (13) களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
Read More...
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைதானது ஏன்?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டின் ஏனைய சமூகத்தினரிடையே, பரவலாகப் பேசப்படும் இஸ்லாமிய அமைப்புக்களில் ஒன்றே இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி. அதன் முன்னைய நாள் தலைவரான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என பரவலாக அறியப்படும் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப்…
Read More...
அல் ஜெஸீராவில் எதிரொலித்த புர்கா, மத்ரசா தடை விவகாரம்
இலங்கை அரசாங்கம் 'தீவிர மதக் கருத்துக்களைக் கொண்டவர்கள்' எனக் கருதப்படுபவர்களை தடுத்து வைத்துள்ளதோடு புர்காவை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தாங்கள் 'இலக்கு' வைக்கப்படுவதாகவும் தங்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறுகின்றனர் -. மேலும் அண்மைக்…
Read More...
பலவந்த ஜனாஸா எரிப்பு : மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பது யார்?
''எனது மாமா உயிரிழந்து சரியாக 70 நாட்களின் பின்னரே அவரது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது. ஒருவர் மரணித்தால் அவருக்காகச் செய்ய வேண்டிய தொழுகை, பிரார்த்தனை, தர்மங்களைக் கூட செய்ய முடியாத நிலையில்தான் நாங்கள் இவ்வளவு நாட்களும் இருந்தோம். இக் காலப்பகுதியில் ஜனாஸாவை எரித்துவிடுவதற்கு அதிகாரிகள் முயன்றனர். அடிக்கடி எமது…
Read More...
ஓட்டமாவடியில் சீராக நடைபெறும் ஜனாஸா நல்லடக்கம்
சுமார் ஒரு வருடகாலமாக மறுக்கப்பட்டு வந்த கொவிட் தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமை மீளக் கிடைக்கப் பெற்றதையடுத்து இலங்கை முஸ்லிம்கள் ஆறுதலடைந்துள்ளார்கள்.
கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5 வெள்ளிக்கிழமை முதல் ஓட்டமாவடி…
Read More...
இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்ய தடையா?
எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இஸ்லாமிய சமய புத்தகங்களும் பாதுகாப்பு அமைச்சினால் பரிசீலனை செய்யப்பட்டு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கினால் மாத்திரமே இலங்கை சுங்க திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More...
முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோருவாரா மைத்திரி?
2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சம்பவத்துக்குப் பின் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அவர்களது சொத்துக்களுக்கு இழைக்கப்பட்ட சேதங்கள் இவற்றை எல்லாம் விட பெரும்பான்மை சிங்கள மக்களின் சிந்தனைகளில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நஞ்சூட்டப்பட்டமை என சகல…
Read More...
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்
2018 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்திலுள்ள திகன மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு சரியாக மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. மார்ச் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை தொடராக இடம்பெற்ற இவ் வன்முறைகள் காரணமாக நாடு முழுவதிலும் 10 நாட்கள் அவசரகால நிலை…
Read More...