அதிர்ச்சியை தோற்றுவித்துள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் கணிசமானோர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் முன்னணி இஸ்லாமிய பிரசாரகரும் பிரதான இஸ்லாமிய இயக்கங்களுள் ஒன்றான ஜமாஅதே இஸ்லாமியின் சிரேஷ்ட தலைவருமான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கை…
Read More...
விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 06
இவ்வருடம் மே மாதம் (ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து) முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவக் கெடுபிடிகளும் சோதனை நடவடிக்கைகளும் வரலாற்றில் என்றென்றும் இல்லாதவாறு தீவிரமடைந்ததை மிக இலகுவில் நாம் மறந்துவிட முடியாது. 1990 களில் கிழக்கு மாகாண முஸ்லிம் கிராமங்களில் புலிகளை வேட்டையாட வந்த இலங்கை இராணுவம் கண்ணில் பட்ட முஸ்லிம்…
Read More...
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கை : ஜனாதிபதித் தேர்தலை தருணமாக்குவது எப்படி?
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை 1987களிலேயே முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் போராட்டமாக உருவெடுத்து அதற்காக தமது ஆதரவை நிரூபிக்கும் வகையில் கடந்த 2018.02.10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் இக்கோரிக்கையின் அடிப்படையில் போட்டியிட்ட தோடம்பழச் சின்னத்திலான சுயேச்சைக்…
Read More...
முஸ்லிம்களின் சிறுவயதுத் திருமணங்கள் ஓர் ஆட்டுக் குட்டி ஓநாய் கதைதான்
அடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அல்லது அச்சம் பயம் காரணமாக முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கை முறையை மட்டுமல்ல, இஸ்லாமிய அடையாளங்களையும் கூட மாற்றி யமைப்பதற்குத் தங்களைத் தயார் பண்ணிக் கொள்வோமா என்று பேசுகின்ற நமது நாட்டில் முஸ்லிம்களின் சிறுவயது திருமணங்கள் என்ற விடயத்திலுள்ள யதார்த்தங்கள் என்னவென்று நாம்…
Read More...
காத்தான்குடியில் சிங்கள – முஸ்லிம் உறவுகள்
சரதியலும் மம்மாலி மரிக்காரும் உற்ற தோழர்கள்.. பிரித்தானிய அரசுக்கெதிராகப் போராடிய அவர்கள் இருவரும் செல்வந்தர்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து வந்தனர். 1864 மார்ச் மாதம் 21 ஆம் திகதி இவர்கள் இருவரும் மறைந்திருந்த வீடு பிரித்தானிய பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு இருவரும்…
Read More...
விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 05
பாரம்பரிய மத்ரஸா கல்வி முறை தீவிரவாதத்திற்கு வகைசெய்கிறது என்ற ஒரு பிழையான எடுகோளின் பின்னணியில் மத்ரஸா கல்வியை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் (Madrasa Education Regulatory Bill) எனும் பெயரில் விவாதிக்கப்பட்ட மசோதா தற்போது இலங்கை இஸ்லாமிய கல்விச் சட்டம் (Sri Lanka Islamic Education Act) எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. 13…
Read More...
ஏப்ரல் 21 இன் பின்னர் முக்கராகுளம் கிராமத்தில் கைதான இரு சகோதரர்கள்
தவ்ஹீத் ஜமாஅத்துடன் தொடர்புகளைப் பேணியதுடன், அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதக் கருத்துக்களைப் பரப்பி அவற்றுக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்கள் தமது உண்மை நிலையை வெளிக்கொண்டுவர சட்ட உதவியை நாடும் சம்பவமொன்று ஹொரவப் பொத்தானையில்…
Read More...
பொலிஸாரின் உத்தரவினால் ஒரு மாதமாக மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்
ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அலை உச்சகட்டத்தை எட்டியிருந்தது. இந்நிலையில் மே 13 ஆம் திகதி முதல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தி கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த வன்செயல்களின்போது முஸ்லிம்களின் பெரும்…
Read More...
ஐந்தாவது கடமையை நிறைவேற்றக் கிடைத்த அதிஷ்ட வாய்ப்பும் அழகான பயணமும்
பண வசதியும் உடல் பலமும் இருப்பவர்களுக்குத்தான் அல்லாஹ் ஐந்தாம் கடமையை கட்டாயப்படுத்தியிருக்கிறான். சாதாரண வருமானம் பெறுபவர்களுக்கு ஹஜ் யாத்திரை ஒரு கனவாகத்தான் இருக்கும். எனினும், குறித்த கனவு எதிர்பாராத நேரத்தில் நிறைவேறுவதானது ஓர் இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும். அப்படியானதொரு அனுபவம் கடந்த ஆகஸ்ட் முதலாம்…
Read More...