ஏறாவூர் முஸ்லிம் பிரதேசத்திற்குள் வரும் புன்னைக்குடா வீதி எனும் பொதுப் பெயரை சிங்களப் பெயராக மாற்ற ஆளுநர் உத்தரவு
தொன்று தொட்டு “ஏறாவூர் புன்னைக்குடா வீதி” என புழக்கத்திலிருந்து வரும் புன்னைக்குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளது பிரதேசத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Read More...
புத்தளம் புதிய காதிநீதிவான் மீது தாக்குதல்: யார் கூறுவது உண்மை?
நாட்டில் சட்டமியற்றும் உயரிய சபையின் உறுப்பினர் ஒருவருக்கும், நீதி வழங்கும் நீதிவான் ஒருவருக்கும் இடையில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
Read More...
மூடுவிழாவை நோக்கித் தள்ளப்படும் கபூரியா அரபுக் கல்லூரி
நாட்டின் அரபுக்கல்லூரிகளில் 92 வருட காலம் பழைமை வாய்ந்த மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி திட்டமிட்டு மூடுவிழாவை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றமை சமூகத்தை கண்கலங்கச் செய்துள்ளது.
Read More...
ஹாதியாவின் பிணையின் பின்னால் இருந்த சவால்களும் போராட்டங்களும்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவித்து கடந்த15 ஆம் திகதி கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதிலிருந்து 48 மணி நேரம் கடந்த நிலையிலேயே அதாவது, 17 ஆம் திகதி மாலை 5.45 மணியளவிலேயே அவர்…
Read More...
நோன்பு ஒரு வரம்
வழமை போன்று இம்முறையும் ரமழான் நோன்பு நம்மை வந்தடைந்துள்ளது. வழக்கம் போல் நாமும் உற்சாகமாக நோன்பை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். வருடா வருடம் எத்தனையோ நோன்புகளை நாம் கடந்து சென்றிருக்கிறோம். ஆனால் ரமழான் மாத நோன்பு எம்மில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
Read More...
நாட்டிலும் நெருக்கடி வீட்டிலும் நெருக்கடி ; உயிரை மாய்க்கும் குடும்பங்கள்
தனிப்பட்ட மன அழுத்தங்கள், வீட்டுக்குள் நிலவும் பிரச்சினைகள்,பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள தாய்மார்கள் தங்களதும் தங்களது பிள்ளைகளினதும் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களாக இடம் பெற்றுள்ள இவ்வாறான சம்பவங்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
Read More...
இருளில் மூழ்கடிக்கப்பட்ட கபூரியா
“எங்களது கல்லூரியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட செய்தியறிந்து உம்மா தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு துயரம் மேலிட்டு அழுதார். உம்மாவின் அழுகை என்னையும் அழ வைத்துவிட்டது. யா அல்லாஹ் எங்களுக்கு ஏன் இந்தச் சோதனை? நாங்கள் யாருக்கு குற்றம் செய்தோம்? என்று நானும் கதறியழுதேன்.’’
Read More...
இன்று நடக்க வேண்டிய தேர்தல் என்று நடக்கும்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படுமா? இன்றேல் பிற்போடப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகளின் மத்தியிலும் வலுத்து வந்த நிலையில், கடந்த வாரம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் நம்பிக்கை ஒளியை சுடர்விடச் செய்துள்ளது.
Read More...
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காலாவதியான கண்ணீர்ப் புகை குண்டுகள்
காலி முகத்திடலை மையப்படுத்தி 'அரகலய' எனும் பெயரில் நடாத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்ற போராட்டக் காரர்கள் மீது காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
Read More...