மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மஹிந்த ராஜபக் ஷவுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்குமுகமாக உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராகப் பதவிவகித்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. கடந்த 2018 டிசம்பர் நான்காம் திகதி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த விஷேட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இந்த விஷேட மேன் முறையீட்டு மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா,…