சிரியாவில் உறையவைக்கும் குளிர் 15 சிறுவர்கள் பலி
பூச்சியத்தை விடவும் குறைந்த குளிர் மற்றும் மருத்துவ வசதியின்மை ஆகியவற்றினால் சிரியாவில் குறைந்தது 15 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.
உறையவைக்கும் குளிர் காரணமாக சிரிய – ஜோர்தான் எல்லையில் அமைந்துள்ள ருக்பான் முகாமில் எட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான முகவரகமான யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்பிற்கும், அமெரிக்க ஆதரவுடன் செயற்பட்டு வரும் சிரிய ஜனநாயகப் படைக்கும் இடையே வடகிழக்கு நகரான ஹாஜினில் நடைபெறும் மோதல்கள் காரணமாக…