மோசடிக்காரர்களுக்கு எதிராக வழக்கு தொடர்க
மத்தியவங்கி பிணைமுறி மோசடி உட்பட பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ள மோசடிக்காரர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்கவேண்டும். ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் அமைச்சருமான அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.…