ரொஹான் பெரேராவாக வாழ்ந்து மரணித்த ‘தத்துவஞானி’ பஸ்லி நிஸார்
கடந்த ஞாயிறு(14) மாலை நண்பன் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருக்கும் போது பொரல்லை ‘ஜயரத்ன’ மலர்ச்சாலைக்கு முன்பாக சில நண்பர்களும் இடதுசாரி கம்யூனிஸ கொள்கை அரசியலில் ஈடுபடுகின்ற ஒரு சிலரையும் கண்டேன். யாரோ என் நண்பர்களுக்கு தெரிந்த ஒருவர் இறந்திருப்பார், என நினைத்து எனது பயணத்தை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் திரும்பவும் வீட்டை நோக்கி பயணித்தேன்.