அஷ்ரபின் மரணம் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தூக்கிப்பிடிக்க ஒன்றுமில்லை
தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் பெரிதாகத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்க ஒன்றுமே இருக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.