விஜயகலாவை கைது செய்யாது ஞானசாரரை சிறைவைப்பது நியாயமல்ல: சிங்கள ராவய
விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது, இராணுவ வீரர்கள் பற்றி கருத்து தெரிவித்த ஞானசார தேரரை கைது செய்து சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை நியாயமற்றதென சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்தார். இராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீசத்தர்ம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும்…