எனது வேண்டுகோளுக்கிணங்கவே ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிக்கப்பட்டது

முஸ்லிம் சமய விவகார அமைச்சராக பதவி வகித்த சமயம் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ் விடுத்த வேண்­டு­கோ­ளுக்­க­மைய சவூதி அரே­பியா அர­சாங்கம் இலங்­கையின் ஹஜ் கோட்­டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக ஆளுநரின் ஊட­கப்­பி­ரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கைக்கு இது­வரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டி­ருந்­தது. கிட்­டத்­தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல  விண்­ணப்­பித்­தி­ருந்தும் ஹஜ் செல்­வ­தற்­கான வாய்ப்பு…

இஸ்ரேலிய வான் தாக்குதல்; ஒருவர் பலி, இருவர் காயம்

கிழக்கு காஸாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 24 வயதான மஹ்மூட் அல்-நபாஹின் என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டவர். இதில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதோடு, அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகக் காணப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கி ரவையொன்று இஸ்ரேலிய படைவீரர் ஒருவரின் தலைக்கவசத்தைத் தாக்கியதால் அவர் காயமடைந்ததை அடுத்து சற்று நேரத்தில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்…

இனவாதத்தை தூண்டுவோர் எவரும் மத்தியில் இல்லை

நாங்கள் இனவாதிகள் அல்லர். இனவாதத்தை தூண்டுவோர் யாரும் எம் மத்தியில் இல்லை. எமது நாட்டை துண்டாட முடியாது என்று நாட்டின் பிரிவினைக்கு எதிராகக் குரல் கொடுப்பதால் எம்மை இனவாதிகள் என்கின்றனர். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நாட்டின் மீது நாம் அன்பு செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். பத்தரமுல்ல, படபொத்த ஸ்ரீ சுதர்சனாராம விகாரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.…

சிரியாவில் கார் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி

சிரியாவின் கரையோர நகரான லடாகியாவின் அதிக சன நடமாட்டமிக்க சந்தியொன்றில் இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானதோடு 14 பேர் காயமடைந்ததாக அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. சிரிய அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதலாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரச படையினர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான தாக்குதலில் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் ஒப்பீட்டு ரீதியில் ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்ட இப் பிரதேசம் தற்போது அமைதியை இழந்துள்ளது.…