ஹஜ் விவகாரத்தில் மீண்டும் அரசியலை நுழைப்பது நல்லதல்ல
ஹஜ் விடயத்தில் சகல தரப்பினரது ஒத்துழைப்பும் வரவேற்கத்தக்கதாகும். இவ்விவகாரத்தில் மீண்டும் அரசியல் உள்ளீர்க்கப்படுவது அழகான வியமல்ல என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
ஹஜ் கோட்டா அதிகரிப்பு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த அரசாங்கத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு இல்லாத காரணத்தால் ஹஜ் விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. இதற்குப் பிரதான காரணமாக இந்த விடயத்தில் அரசியல்வாதிகளின்…