14335 வரை பதிவிலக்கமுள்ளோர் 28 ஆம் திகதிக்கு முன்னர் பயணத்தை உறுதிபடுத்துக

இவ்வருடம் ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளவர்களில் 14335 வரையிலான பதிவிலக்கம் கொண்ட விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 28  ஆம் திகதிக்கு முன்பு மீளளிக்கப்படக்கூடிய பதிவுக்கட்டணம் 25 ஆயிரத்தைச் செலுத்தி தங்கள் பயணங்களை உறுதி செய்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர். எம். மலிக் அறிவித்துள்ளார். பதிவிலக்கம் 14335 க்குட்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு இது தொடர்பான விபரங்கள் கடித மூலமும் குறுந்தகவல் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளன. தகவல்கள் கிடைக்காதவர்கள் பதிவுக்கட்டணம் 25 ஆயிரம்…

2019 ஹஜ் யாத்திரை: 3400 பேர் பயணத்தை உறுதிசெய்துள்ளனர்

இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளில் நேற்றுவரை 3400 பேர் தங்கள் பயணத்தை முஸ்லிம் சமய  பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் உறுதிசெய்துள்ளனர். இவ்வருடம் ஹஜ் கடமைக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளுக்கு அது குறித்த  கடிதங்கள்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15–20 ஆம் திகதிக்கிடையில் அனுப்பிவைக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம்.மலீக் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஹஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டவர் களுக்கான விழிப்புணர்வுக்…

இந்திய பொலிஸாரினால் ரோஹிங்ய முஸ்லிம்கள் கைது

இந்தியாவின் இந்துத்வ தேசியவாத அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வெளியேறிக்கொண்டிருந்த 61 ரோஹிங்ய முஸ்லிம்கள் இந்தியாவின் திரிபுராவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். பங்களாதேஷிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இரண்டு நாடுகளின் எல்லைகளிலுமிருந்த அதிகாரிகள் இவர்களை என்ன செய்வதென்ற இணக்கத்திற்கு வராததன் காரணமாக கடந்த திங்கட்கிழமை 16 சிறுவர்கள், ஆறு பெண்கள் அடங்கிய இக்குழுவினர் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பெரும்பான்மையான முஸ்லிம் ரோஹிங்யர்களை…

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பாகிஸ்தானில் கைது

வன்முறையில் ஈடுபட்டதாகவும் எதிர்ப்புணர்வைத் தூண்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் பாகிஸ்தான் நீதிமன்றமொன்றில் ஆஜர் செய்யப்பட்டார். பஷ்துன் மனித உரிமை செயற்பாட்டாளரான அலாம்ஸெப் மெஹ்சூட் கடந்த திங்கட்கிழமை மாலை பாகிஸ்தானின் பெரிய நகரான கராச்சியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது தொடர்பான காணொலி பஷ்துன் தஹாப்புஸ் இயக்கத்தினால் பதிவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. சனநெரிசல்மிக்க வீதியொன்றில் பொலிஸாரினால் இடைமறிக்கப்படும் மெஹ்சூடின் வாகனத்திலிருந்து…