புதிய நகல் யாப்பு என்ன சொல்கிறது?
வை. எல். எஸ். ஹமீட்
நிபுணர்களின் அறிக்கை என்ற பெயரில் புதிய நகல் யாப்பு கடந்த 11/01/2019 அன்று அரசியலமைப்பு சபையில் வெளியிடப் பட்டிருக்கின்றது. இதிலுள்ள மிகவும் முக்கியமான அம்சம் “இலங்கை சமஷ்டித் தன்மை" உள்ள நாடு என்பதாகும். ஆனால் “சமஷ்டி“ என்ற சொல் பாவிக்கப்படவில்லை. எனவே, தமிழ் மக்கள் மத்தியில் இது சமஷ்டி இல்லை என்றவொரு கருத்து விதைக்கப்படுகின்றது.
மறுபுறம் “ஒற்றையாட்சி“ என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய “ ஏக்கியராஜ்ய” என்ற சிங்களச் சொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இது ஒற்றையாட்சிதான் என்று சிங்கள…