சிந்தித்து செயற்படாதவரை எதிர்காலம் ஆபத்தானதுதான்
இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சூழ சர்வதேச சதி வலைகள் பின்னப்படுகின்றனவா? அல்லது நமது சமூகத்தில் உள்ளவர்களே நமக்கான படுகுழியைத் தோண்டிக் கொள்கிறார்களா எனும் சந்தேகம் அண்மைய நாட்களாக வலுப்பெறுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களைத் தேடிச் சென்ற வேளை புத்தளம், வணாத்தவில்லு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையானது பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய இளைஞர்கள் அதிதீவிரப்போக்கு கொண்டவர்களாக மாறியிருக்கிறார்களா?…