குடியேற்றவாசிகளின் வன்முறையின்போது பலஸ்தீன நபர் சுட்டுக்கொலை

ரமல்லாஹ்வுக்கு வடகிழக்கே அமைந்துள்ள அல்-முக்ஹைர் கிராமத்தில் குடியேற்றவாசிகளுக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததோடு டசின்கணக்கானோர் காயமடைந்தனர். ஹம்தி நஸ்ஸான் என அடையாளம் காணப்பட்ட 38 வயதான நபர் முதுகுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர். ஹம்தி நஸ்ஸான் தனது மனைவி மற்றும் நான்கு…

மத்ரஸா, இயக்கங்களுக்கும் பதிவு கட்டாயமானதாகும்

அரபுக் கல்லூரிகள் மாத்திரமல்ல ஹிப்ளு மத்ரஸா, குர்ஆன் மத்ரஸா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கட்டாயமாக வக்பு சபையின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுகள் இன்மையால் அவற்றைக் கண்காணிப்பதற்கு சட்டரீதியாக இயலாமல் இருக்கிறது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரிவித்தார். அரபுக் கல்லூரிகள் வக்பு சபையின்கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான அமைப்புகளும் கல்லூரிகளும் வக்பு சபையின் கீழ் பதிவு…

ஐக்கிய நாடுகள் சபையும் பலஸ்தீன அகதிகளும்

தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் 22.01.2019 டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் இரண்டாம் உலக மகா யுத்­தத்தின் அழி­வு­க­ளை­ய­டுத்து உலகம் முழு­வ­திலும் வாழ்ந்த மக்­களால் சமா­தா­னமும் அமை­தியும் எதிர்­பார்க்­கப்­பட்ட காலத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரூஸ்­வெல்­டினால் உரு­வாக்­கப்­பட்ட சொற்­ப­தமே 'ஐக்­கிய நாடுகள் சபை' என்ற பெய­ராகும். நாம் இப்­போது அறிந்து வைத்­தி­ருப்­பதைப் போன்று ஐக்­கிய நாடுகள் சபை என்­பது சர்­வ­தேச சமா­தானம் மற்றும் பாது­காப்­பினை பேணிக் காப்­பதை ஆரம்பப் பணி­யா­கவும் நாடு­க­ளி­டையே நட்­பு­றவை விருத்தி செய்­வதை…

போதையிலிருந்து விடுபடுமா இந்நாடு?

எம்.எம்.ஏ.ஸமட் புதிய அரசியலமைப்பு வரைவையும், ஜனாதிபதி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்திய கருத்துவாதங்களினால் தேசிய அரசியல் சதுரங்கம் சூடேறியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்  பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் வீதி விபத்துக்கள், கணினிக் குற்றங்கள், காட்டு யானைகளின் தாக்குதல்கள் என தினமும் இடம்பெறுகின்ற சம்பவங்கள் சமூக ஆரோக்கியத்தை கேள்விக்குட்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது.…