பிரதமர் ரணிலும் தேர்தல் உரிமையை பறிக்கின்றார்

மாகாணசபை தேர்தலை நடத்தும் வரையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதோடு அரசாங்கத்தை  எதிர்த்து  மக்கள் எதிர்ப்பு போராட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். ஜே.ஆர் எவ்வாறு தேர்தல்களை நடத்தாது காலத்தை கடத்தி   தனது ஆட்சியை தக்கவைக்க நினைத்தாரோ அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட்டு மக்கள் உறிமையை பறித்து வருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். மாகாணசபை தேர்தல்களை கோரி எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில்…

அமெரிக்க – தலிபான் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

தெற்காசிய நாட்டில் இடம்பெற்றுவரும் 17 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான்களுடன் ஆறு நாட்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சமாதானத் தூதுவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை விட இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கபூர்வமானவையாக அமைந்திருந்தன. மிக முக்கியமான பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் கண்டுள்ளோம் என ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க…

சிறுபான்மை கட்சிகளே இனவாதத்திற்கு காரணம்

சிறுபான்மைக்  கட்சிகள், பிரதான கட்சிகளின் பங்காளிகளாக மாறி, பங்கு கேட்பதன் விளைவாகவே,  நாட்டில் இனவாதம் ஏற்படுகின்றதென, முன்னாள் அமைச்சர்  பைஸர் முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தேர்தல்களின்போது இனம் மற்றும் மதத்துக்கு அப்பால் நின்று,  'இலங்கையர்'  என்ற ரீதியில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விகிதாசார முறைமையின் கீழ் எவ்வாறான பிரதிநிதிகள் தெரிவு…

அரபுக்கல்லூரி குறித்த தீர்மானம்: தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன

அரபுக் கல்லூரிகள் தொடர்பில் நான் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அண்மைக்கால சம்பவங்களைத் தொடர்பு படுத்தி எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எனது தீர்மானம் எந்தத் தரப்பினதும் அழுத்தங்களுக்கு உட்பட்டதானதல்ல. அரபுக்கல்லூரிகளை தரமுயர்த்தி எமது மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதே எனது இலக்காகும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார். அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அரபுக் கல்லூரிகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில்…