சிங்கள தரப்பு ஆட்சியை குழப்பாவிடின் தீர்வு உறுதி

ஐக்கிய தேசிய கட்சியே  நாட்டினை பிளவுபடுத்தும் கட்சி என்றால் இந்த நேரத்தில் இலங்கையில் இரண்டு நாடு இருந்திருக்க வேண்டும். எம்மைப் பிரிவினைவாதிகளாக சித்திரித்து ராஜபக் ஷவினர் ஆட்சி செய்யப் பார்க்கின்றனர். எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் மீதான நம்பிக்கையில்தான் தமிழர் தலைமைகள் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு கேட்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். எமது ஆட்சியை முன்னெடுக்க இடம் தாருங்கள் தீர்வுகளை நாம் பெற்றுத் தருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு விவகாரம்…

மாவனெல்லை: தேடப்படும் சகோதரர்களின் கணக்கிற்கு இலட்சக்கணக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது

மாவனெல்லை மற்றும் அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமையுடன் தொடர்புடைய, பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சகோதரர்கள் இருவரதும் வங்கிக் கணக்குகளுக்கு இடைக்கிடை இலட்சக்கணக்கான ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனியார் வங்கியொன்றிலுள்ள குறிப்பிட்ட கணக்கு பற்றி விபரங்களை அறிந்து கொள்வதற்காக நீதிமன்றிலிருந்து உத்தரவைப் பெற்றுக்கொண்டு அந்த உத்தரவினை குறிப்பிட்ட தனியார் வங்கிக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.…

உடன்பாட்டை மீறும் வகையில் வடக்கு சிரியாவில் துருக்கியின் பிரசன்னம் – டமஸ்கஸ் கண்டனம்

சிரியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் 1988 ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாட்டினை மீறும் வகையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கிய இராணுவத்தின் பிரசன்னம் காணப்படுவதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தெரிவித்துள்ளார். சிரியா மேற்கொண்ட எட்டு வருட யுத்தத்தின் மூலம் எட்டப்பட்ட அதானா உடன்பாட்டை மீறுவதாக அங்காரா மீது குற்றம் சுமத்துவதாக டமஸ்கஸிலுள்ள வெளிநாட்டு அமைச்சு கடந்த சனிக்கிழமை தெரிவித்தது. 2011 ஆம் ஆண்டிலிருந்து துருக்கிய அரசாங்கம் இந்த உடன்பாட்டை மீறியது, தொடர்ந்தும் மீறி வருகின்றது.…

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்துவத்தில் சவூதி அசமந்தம்

பயங்கரவாத்திற்கு நிதியளிப்பதை கட்டுப்படுத்துவதில் அசமந்தம் மற்றும் பணப் பரிமாற்றம் என்பன காரணமாக தமது அமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளுள் ஒன்றாக சவூதி அரேபியாவினை ஐரோப்பிய யூனியன் வரைவுப் பட்டியலில் ஐரோப்பிய ஆணைக்குழு சேர்த்துக்கொண்டுள்ளது. சவூதி அரேபிய ஊடகவியாலாளர் ஜமால் கஷோக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமையினையடுத்து சர்வதேச சமூகத்தின் சவூதி அரேபியா மீதான இறுக்கமான அழுத்தங்கள் காரணமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் தற்போதைய பட்டியலில் ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், வட கொரியா…