மாவனெல்லை, வனாத்துவில்லு சம்பவங்களை முஸ்லிம்கள் ஒருபோது அங்கீகரிக்கவில்லை
மாவனெல்லை மற்றும் வனாத்தவில்லு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. இச்சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கிறது எனத் தெரிவித்த மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி, இவ்வாறான சம்பவங்களின் போது பொலிஸ் திணைக்களம் உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட வேண்டும் எனவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை வேண்டிக் கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா…