கிண்ணியாவில் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீது கட,ற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம்
கிண்ணியா பிரதேசத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சமயம், அதிலிருந்து தப்பிக்க முற்பட்ட இருவர் ஆற்றில் பாய்ந்து மூழ்கி காணாமல் போன நிலையில் நேற்று மாலை ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிண்ணியா இடிமண் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான றபீக் பாரிஸ் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆற்றில் பாய்ந்த மற்றொரு இளைஞரான 19 வயதான பஸீது றமீஸின் சடலத்தை தேடும் பணி நேற்றிரவு வரை தொடர்ந்தது.