சிரிய அகதிகள் பாதுகாப்பாக திரும்பிச்செல்ல உருவாக்கப்படும் பாதுகாப்பு வலயம் உதவும்

துருக்கி அடைக்கலம் வழங்கியுள்ள சிரிய அகதிகள், பாதுகாப்பாக தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டே பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டுள்ளது என துருக்கிய ஜனாதிபதி றிசெப் தைய்யிப் அர்துகான் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று இஸ்தான்பூலில் பேசிய அர்துகான், சுமார் 300,000 சிரிய அகதிகள் வடக்கு சிரியாவின் துருக்கியின் ஆதரவுடனான கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு மீளத் திரும்பிவிட்டனர் எனத் தெரிவித்ததோடு மில்லியன் கணக்கான சிரிய மக்கள் பாதுகாப்பு வலயத்தினூடாக மீளத் திரும்புவதற்கு வருகை…

இஸ்ரேல் ஒரு குற்றவாளி நாடாகும் மலேசிய பிரதமர் குற்றச்சாட்டு

இஸ்ரேல் ஒரு குற்றவாளி நாடாகக் காணப்படுகின்றதென மலேஷிய பிரதமர் மஹதிர் மொஹம்மட் கடந்த திங்கட்கிழமையன்று விமர்சித்துள்ளார். பலஸ்தீன மக்களுக்கான தனது ஆதரவினைத் தெரிவித்து வலைத்தளமொன்றில் அவர் எழுதியுள்ள பதிவில், இஸ்ரேல் ஒரு குற்றவாளி நாடாகக் காணப்படுகின்றது. அது கண்டிக்கப்பட வேண்டிய நாடாகும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்கு மலேஷியா விசா வழங்க மறுத்ததையடுத்து இவ்வருட போட்டியினை மலேஷியாவில் நடத்துவதற்கான அனுமதியை சர்வதேச பரா ஒலிம்பிக் அமைப்பு மீள்ப்பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்தே மலேஷிய பிரதமர் மஹதிரின்…

மூன்று பாக். பிரஜை உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டணை

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று பாகிஸ்தான் நாட்டவர் மற்றும் மூன்று இலங்கையர்களின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டமா அதிபர் சிபாரிசு செய்துள்ளார். மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு சட்டமா அதிபரின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாகும். குற்றவாளிக்கு மேன்முறையீடு செய்வதற்கோ அல்லது விடுதலை பெற்றுக் கொள்வதற்கோ வேறு வழிமுறைகள் உள்ளனவா என்பது சட்டமா…

பாகிஸ்தானில் ஆசியா பீவி மதநிந்தனை விவகாரம் மீளாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

பாகிஸ்தானில் மதநிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்தவ பெண்ணொருவரை விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்பு நாடு முழுவதும் பல நாட்கள் அமைதியின்மையையும், ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளதோடு குறித்த பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. இந் நிலையில் அத் தீர்ப்பினை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் மீளாய்வு செய்யவுள்ளது. மதநிந்தனைக் குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளைச் சிறையில் கழித்த ஆசியா பீவி என்ற பெண் கடந்த ஒக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டார். அந்த விடுதலைக்கு எதிரக முன்வைக்கப்பட்ட…