ஞானசாரருக்கு மன்னிப்பளித்தால் ஜனாதிபதியும் பக்கச்சார்பாக இனவாதியாகவே கருதப்படுவார்

சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்க சார்பில் செயற்படும் இனவாதியாகவே கருதப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பு சுதந்திர தினத்தன்று ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்குவதாகத் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின்…

விழிப்புணர்வுகளால் மாத்திரம் போதையை ஒழிக்க முடியாது

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “போதையிலிருந்து விடுதலையான நாடு” தேசிய நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைய  2015ஆம் ஆண்டு முதல் இதுவரையில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் 11 போதைப்பொருள் ஒழிப்பு மாநாடுகள் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன. 25 மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள், பிரதேச செயலாளர் மட்டத்தில் 331 குழுக்கள், கிராம சேவகர்…

அங்கோலாவில் இஸ்லாம் சட்டரீதியான சமயமாவதற்கு காலம் கனிந்துள்ளது

ஆபிரிக்காவின் தெற்கில் அமைந்துள்ள அங்கோலாவில் மொத்த சனத்தொகை கிட்டத்தட்ட 30 மில்லியனாகும். இவர்களுள் 75 வீதமானவர்கள் கிறிஸ்தவர்கள். இவர்களுள் பெரும்பான்மையினர் கத்தோலிக்கர்களாவர். அங்கோலாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 800,000 ஆகும் என்று அங்கோலா இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் டேவிட் அல்பேர்டோ ஜா தெரிவிக்கின்றார். அங்கோலாவில் காணப்படும் சமயம், தேசத்தில் காணப்படும் சில யதார்த்த நிலைமயினால் பாதிப்புக்களைக் கண்டுள்ளது. இந்த நாட்டின் அரசியல் வரலாறு, சோசலிஸ சித்தாந்தம் மற்றும் பல ஆண்டுகால சிவில் யுத்தம் என்பனவற்றால்…

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: 12 ஆவது சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் ஆவணம் மீட்பு

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் நொறுக்கி சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களில் 12 ஆம் சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் படிமுறைகள் அடங்கிய முக்கிய ஆவணமொன்று மீட்கப்ப்ட்டுள்ளது. புத்தளம், வணாத்துவில்லு - லக்டோ ஹவுஸ் தென்னந்தோப்பில்  வைத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைக் கொண்டு எவ்வாறு இந்த குண்டுகளைத் தயாரிக்கலாமெனும் பூரண செயன்முறை அந்த ஆவணத்தில் இருப்பதாக…