சுதந்திரத்தை பறிக்கும் செயல்களை தவிர்ப்போம்
நாட்டின் 71 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான பிரதான வைபவம் எதிர்வரும் திங்கட் கிழமை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுகிறது. இவ்வருட சுதந்திர தின பிரதான நிகழ்வில் மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்வது சிறப்பம்சமாகும்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் 71 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் காலப்பகுதி பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் பிரதான மற்றும் சமூக ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு…