பாகிஸ்தானில் இவ்வாண்டில் போலியோவால் பாதித்த முதல் குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் இவ்வாண்டின் முதலாவது போலியோ பாதிப்புக்குள்ளான குழந்தை ஆப்கானிஸ்தானுடனான எல்லைக்கருகில் அமைந்துள்ள பஜாஉர் பழங்குடி மக்கள் வாழும் ஹைபர் பாக்ஹ்துங்ஹ்வா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 11 மாதக் குழந்தையொன்றின் உடல் இயக்கம் ஸ்தம்பிதமடைந்துள் ளதாக பாகிஸ்தானின் போலியோ ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவர் பாபர் அத்தாவின் தெரிவித்தார். பஜாஉர் மாவட்டத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களில் ஆறு போலியோ பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.…