பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை

கடந்த சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்­ற­மான நெஸ்­ஸெட்டின் முஸ்லிம் உறுப்­பி­னர்­களை துருக்­கிய ஜனா­தி­பதி அர்­துகான் இஸ்­தான்­பூலில் வர­வேற்றார். துருக்­கிய ஜனா­தி­ப­திக்கும் இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்ற முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யே­யான கலந்து­ரை­யாடல் தரப்யா ஜனா­தி­பதி வளா­கத்தில் (ஹூபர் வில்லா) மூடிய கத­வு­க­ளுக்குப் பின்னால் சுமார் 90 நிமி­டங்கள் வரை நடை­பெற்­றது என ஜனா­தி­ப­தியின் வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. இக் கலந்­து­ரை­யா­டலின் போது பலஸ்­தீன மற்றும் அதன் மக்கள் தொடர்­பான ஆத­ரவு…

9 மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்

மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுத்த வாக்­கு­று­திக்கு அமை­வாக, ஒன்­பது மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்தல் ஒரே தினத்தில் இடம்­பெறும். ஆனால் மாகாண சபை தேர்­தலை புதிய கலப்பு  முறையில் நடத்­து­வதா அல்­லது விகி­தா­சார முறையில் நடத்­து­வதா என்­பது குறித்து இன்னும் இறுதித் தீர்­மானம் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அல­வ­து­வல தெரி­வித்தார். இது தொடர்பில்  கட்சித் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. அனைத்துக் கட்­சி­களும்…

காஸா, மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் 14 பலஸ்தீனர்கள் கைது

இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் காஸா பள்­ளத்­தாக்கு மற்றும் மேற்குக் கரையில்  14 பலஸ்­தீ­னர்­களைச் சுற்­றி­வ­ளைத்­த­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரா­ணுவம் தெரி­வித்­தது. பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்பு பட்­டி­ருந்­தனர் என்ற சந்­தே­கத்தின் பேரில் இஸ்­ரே­லியப்படை­யினர் மேற்குக் கரையில் ஒன்­பது பேரைக் கைது செய்­த­தாக இரா­ணுவம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் என்­ன­வகை செயற்­பா­டுகள் என அதில் விப­ரிக்­கப்­ப­ட­வில்லை. இஸ்­ரே­லிய படை­யி­னரின் சோதனை நட­வ­டிக்­கையின் போது…

எட்டு மாண­வர்கள் விடு­தலை குறித்து மைத்­திரி, ரணில், சஜித்­துடன் பேச்சு

ஹொர­வப்­பொத்­தான கிர­லா­கல தூபியில் ஏறி புகைப்­படம் எடுத்த விவ­காரம் தொடர்பில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 8 மாண­வர்­களின் விடு­தலை தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை, கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாச மற்றும் தொல்­பொருள் திணைக்­களப் பணிப்­பாளர் நாயகம் பி.பீ.மண்­டா­வெல ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­யுள்­ளனர். நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு, நகர திட்­ட­மிடல்…