2018 இல் 480,799 வாகனங்கள் பதிவு

கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரம்  நான்கு இலட்சத்து  80 ஆயிரத்து  799 வாகனங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில்   மொத்தமாக 77 இலட்சத்து 27 ஆயிரத்து 921 வாகனங்கள்  நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நான்கு இலட்சத்து 51 ஆயிரத்து 680 தொடக்கம் ஆறு இலட்சத்து 1651 வாகனங்கள் புதிதாக பதியப்பட்டிருந்தன. ஆகவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 22 ஆயிரத்து 146 புதிய வாகனங்கள் கூடுதலாக பதியப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையின் வாகனக் கணக்கெடுப்பின் பிரகாரம் 33…

மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மஹிந்த ராஜபக் ஷவுக்கு  மேன் முறையீட்டு நீதிமன்றம்  விதித்துள்ள இடைக்காலத் தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்குமுகமாக உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராகப் பதவிவகித்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. கடந்த 2018 டிசம்பர் நான்காம் திகதி  உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த விஷேட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி  6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இந்த விஷேட  மேன் முறையீட்டு மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா,…

மாவனெல்லை சிலை உடைப்பு விவகாரம்: ஏழு சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் உடைத்து சேத­மாக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பில் கைதான ஏழு சந்­தேக நபர்­களினதும் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள்  நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை குறித்த 7  சந்தேக நபர்களும் கண்டி – வெலம்பொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சிலை உடைப்புக்கள் மற்றும் குருணாகல் –…

ஜனாதிபதி தேர்தலை அறிவித்தால் எமது வேட்பாளரை அறிவிப்போம்

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளரை தெரிவுசெய்வது எமக்குப் பெரிய விடயமல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர் தொடர்பாகவுமே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விடயத்தில் நாங்கள் அலட்டிக்கொள்ளமாட்டோம். ஏனெனில் எமது…