மே தினத்தை முன்னிட்டு நாட்டின் தேசிய கட்சிகள் ஏற்பாடு செய்த பாரிய பேரணிகளும் கூட்டங்களும் நேற்றைய தினம் கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்திருந்தன.
உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டத்தை சவூதி அரேபியா ரியாத் நகரில் நடத்த தீர்மானித்துள்ளது. இது இம்மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் போன்ற பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட இருக்கின்றன.
சென்ற 18.04.2024 இல் வெளிவந்த விடிவெள்ளி வாராந்த வெளியீட்டில் “ஜனாஸா எரிப்பு அரச மன்னிப்பா? ஆணைக்குழுவா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதனை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டு “காலத்திற்குத் தேவையான ஒரு விடயத்தை சமூகத்திற்கு முன் எடுத்து வைத்துள்ளீர்கள். இது சம்பந்தமாக நமது சமூகம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்து இவ்விடயத்ததை நூர்ந்து போக விடாது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே!” என்று பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.
2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடைபெற்று இந்த ஆண்டுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு கடந்த 20 ஆம் திகதி மாலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம் வரை மக்கள் நீதி கேட்டு பேரணியாக சென்றனர்.