போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு இரு மாதங்களுள் மரணதண்டை
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க நான் நடவடிக்கை எடுக்கும் போது எமது மனித உரிமை அமைப்புகளே எனக்கு தடையாக உள்ளன. எனினும் இந்த விடயத்தில் யார் தடுத்தாலும் எந்த நெருக்கடி வந்தாலும் அடுத்த இரண்டு மாதத்தில் மரணதண்டனைச் சட்டத்தை நிறைவேற்றி குற்றவாளிகளை தண்டித்தே தீருவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி நேற்று பிற்பகல் சபையில் உரை நிகழ்த்தினார். இந்த உரையின் போதே…