பல்கலை மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்

ஹொர­வ­பொத்­தான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட  கிரலா­கல தூபியில் ஏறி புகைப்­படம் எடுத்து அதனை முகநூல் சமூக வலைத்­த­ளத்தில் பதி­வேற்­றி­ய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் எண்மர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப் புகைப்படங்கள் தொடர்பில் தொல்­பொருள் அதி­கா­ரிகள் வழங்­கிய முறைப்­பாட்­டினை அடுத்து அவர்கள்  பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர். இவ்­வாறு கைது செய்ப்­பட்ட எட்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் கடந்த 24 ஆம் திகதி…

ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பு வழங்கினால் சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம்களும் மகிழ்ச்சியடைவார்கள்

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பு வழங்குவீர்களாயின் சிங்கள மக்களுடன் முஸ்லிம் மக்களும் மட்டில்லா மகிழ்ச்சியடைவார்கள் என அம்பாரை மாவட்ட முஸ்லிம் சமாதான பேரவையின் முன்னாள் தலைவரும்  அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் முன்னாள் தலைவருமான  எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு…

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து தேசத்தை விடுவிக்கும் யுத்தத்திற்கு நாம் தயார்   

30 வருட கொடூர பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு நிகரான யுத்தமொன்றை கொடூர போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டியுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அன்று வெளிப்படுத்திய திறமைகள், துணிச்சல் மற்றும் வீரத்தை இந்த சிரேஷ்ட மானிடப் பணிக்காக நிறைவேற்றுவதற்கு முன்வருமாறு முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அதற்கு தலைமைத்துவத்தை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். நேற்று கொழும்பு…

சூடானில் மீண்டும் அரபு வசந்தம் ஒன்றை ஏற்படுத்த சிலர் முயற்சி

தனது நாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 2011 ஆம் அண்டு இடம்பெற்றதைப் போன்ற அரபு வசந்தமொன்றை ஏற்படுத்த முனைவதாகவும் இனம்தெரியாத வெளிக்குழுக்கள் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு முனைவதாகவும் சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்ரோவிற்கு விஜயம் செய்து எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் எல்-சிசியைச் சந்தித்த பஷீர் 'சூடானில் காணப்படும் அமைதியின்மை சூடானில் மற்றுமொரு அரபு வசந்தத்தை தோற்றுவிக்கும் முயற்சியாகும்' எனத் தெரிவித்தார். கடந்த மாதம் பாணின் விலை அதிகரிக்கப்பட்டதைத்…