துருக்கியில் உலங்கு வானூர்தி விபத்து நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
கடந்த திங்கட்கிழமையன்று இஸ்தான்பூலில் உலங்கு வானூர்தியொன்று அவசரமாகத் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் குறைந்தது நான்கு இராணுவ வீரர்கள் பலியானதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் செக்மெகோயி மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிக்கருகில் இந்த உலங்கு வானூர்தி விபத்து நிகழ்ந்துள்ளதாக அலி எர்லிகாயா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இறந்தோரின் எண்ணிக்கையினை டுவிட்டர்…