அங்கோலாவில் இஸ்லாம் சட்டரீதியான சமயமாவதற்கு காலம் கனிந்துள்ளது

ஆபிரிக்காவின் தெற்கில் அமைந்துள்ள அங்கோலாவில் மொத்த சனத்தொகை கிட்டத்தட்ட 30 மில்லியனாகும். இவர்களுள் 75 வீதமானவர்கள் கிறிஸ்தவர்கள். இவர்களுள் பெரும்பான்மையினர் கத்தோலிக்கர்களாவர். அங்கோலாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 800,000 ஆகும் என்று அங்கோலா இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் டேவிட் அல்பேர்டோ ஜா தெரிவிக்கின்றார். அங்கோலாவில் காணப்படும் சமயம், தேசத்தில் காணப்படும் சில யதார்த்த நிலைமயினால் பாதிப்புக்களைக் கண்டுள்ளது. இந்த நாட்டின் அரசியல் வரலாறு, சோசலிஸ சித்தாந்தம் மற்றும் பல ஆண்டுகால சிவில் யுத்தம் என்பனவற்றால்…

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: 12 ஆவது சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் ஆவணம் மீட்பு

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் நொறுக்கி சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களில் 12 ஆம் சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் படிமுறைகள் அடங்கிய முக்கிய ஆவணமொன்று மீட்கப்ப்ட்டுள்ளது. புத்தளம், வணாத்துவில்லு - லக்டோ ஹவுஸ் தென்னந்தோப்பில்  வைத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைக் கொண்டு எவ்வாறு இந்த குண்டுகளைத் தயாரிக்கலாமெனும் பூரண செயன்முறை அந்த ஆவணத்தில் இருப்பதாக…

உலகில் 8 வலயங்களில் 56 மில்லியன் மக்களுக்கு அவசர உணவுத் தேவை

உலகில் முரண்பாடுகள் காணப்படும் எட்டு வலயங்களில் சுமார் 56 மில்லியன் மக்களுக்கு அவசர உணவுத் தேவையும் வாழ்வாதார உதவிகளும் தேவைப்படுவதாக கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யெமன், தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய ஐந்து வலயங்களுமே முரண்பாடுகள் காரணமாக உணவுத் தேவை ஏற்பட்டுள்ள வலயங்களாகும். பெரும்பாலானவை 2018 ஆண்டின் பிற்பகுதியிலேயே அதிக தேவைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கை…

போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அவமதிப்போர் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டோர்

போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை அவமதிக்கின்றவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எத்தகைய தோற்றத்தில் இருந்தபோதும் அவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்திற்கு அடிமையானவர்களாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்றைய தினம் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற “போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாடு” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே…