294.5 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிக தொகை ஹெரோயின், நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைவாக அப்பிரிவினரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை­யி­னரும் இணைந்து கொள்­ளுப்­பிட்டி நவீன சந்தை கட்­டிடத் தொகு­தியின் வாகனத் தரிப்­பி­ட­மொன்றில் முன்­னெ­டுத்த விசேட சுற்றி வளைப்­பி­லேயே இப்­போதைப் பொருள் சிக்­கி­யது. இதன்­போது சுமார் 353.388 கோடி ரூபா பெறு­ம­தி­யான 294 கிலோ 490 கிராம்  ஹெரோயின்  கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. அத்­துடன் குறித்த போதைப்­பொ­ருளை வர்த்­தக…

முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணியும் உரிமையை உறுதிப்படுத்தியது மனித உரிமைகள் ஆணைக்குழு

திரு­கோண­மலை ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த அபாயா அணிந்து கட­மையில் ஈடு­ப­டு­வ­தற்­கான தடை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மை­யாற்­று­வது அவர்­க­ளது அடிப்­படை உரிமை என்றும் அதற்குத் தடை விதித்­ததன் மூலம் பாட­சா­லையின் அதிபர், குறித்த ஆசி­ரி­யை­களின் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மையை மீறி­யுள்­ள­தா­கவும் இலங்கை மனித உரி­மைகள்…

மாசற்ற புத்தளம்: தொடரும் மக்கள் போராட்டம்

மனித வாழ்வின் ஆதாரம் இயற்­கைதான். நாம் தாயின் வயிற்றில் இருக்­கும்­போதே இயற்­கையின் தேவை ஆரம்­ப­மாகி விடு­கின்­றது. சுத்­த­மான காற்று, சுத்­த­மான நீர், சுத்­த­மான சுற்­றாடல். நிலமும் நீரும் வனமும் வன ஜீவ­ரா­சி­களும் காற்றும் சுத்­த­மான வளி­மண்­ட­லமும் இன்றி மனித வாழ்வு சாத்­தி­ய­மில்லை.

இந்திய – பாகிஸ்தான் முறுகல் ஆரோக்கியமானதல்ல

உலகிலேயே மிகவும் இராணுவமயமான மண்டலங்களில் ஒன்று காஷ்மீராகும். அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மிகவும் கொந்தளிப்பான பகுதியாக இது இருந்து வருகிறது. இந்த பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை இதன் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கடந்த வாரம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய படைப்பிரிவுகள் மீது பல தசாப்தங்களில் காணாத மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் 50 இந்திய படையினர் கொல்லப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் இந்த பிரதேசத்தில் நிகழ்ந்த…