மெளலவி ஆசிரியர் நியமனம் உடன் வழங்கப்பட வேண்டும்
இந்த வருடத்துக்குள் மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவேண்டும். அதற்காக அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள உடுகொட அரபா மகாவித்தியாலயத்துக்கு குவைத் நாட்டு தனவந்தரின் நிதி உதவியில் கட்டப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட புதிய பாடசாலை கட்டிடத் திறப்புவிழா நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு…